“சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டது அவ்வளவு வலியாக இருந்தது.. எனக்கு புரியவே இல்லை!” – கேஎல்.ராகுல் வருத்தமான பேச்சு!

0
536
Rahul

இந்திய கிரிக்கெட்டில் திறமைக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தும் நிறைய கேலி கிண்டல்களை சந்தித்த ஒரு வீரராக கே எல் ராகுல் முதலிடத்தில் இருப்பார்.

அதேபோல் தொடர்ச்சியாக காயங்களால் பாதிப்படைந்ததில் உலக கிரிக்கெட்டில் கேஎல்.ராகுல் மிக முக்கியமான நட்சத்திர வீரர். இந்திய அணிக்கான அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் ஒரு பகுதியாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இடையில் அவருக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் அவர் மிகக் கடுமையாக உழைத்து, பேஸ்மேனாக மட்டும் அணிக்கு திரும்பி வராமல், விக்கெட் கீப்பராகவும் வந்து, ஆசியக் கோப்பைத் தொடர் முதல் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் போட்டி வரை அசத்தி, ஆட்டநாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.

அவர் தன்னுடைய கடினமான கடந்த காலத்தை பற்றி பேசுகையில் “அப்பொழுது நிறைய விமர்சனங்கள் இருந்தன. சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டது மன வலியைத் தந்தது. மக்கள் அப்படி ஏன் செய்கிறார்கள்? அதெல்லாம் எங்கிருந்து வருகிறது? என்பது குறித்து எனக்கு புரியவே இல்லை. ஏனென்றால் எனது செயல் திறன் மோசமாக இல்லை. எனக்கு அது மிகவும் வேதனையான காலக்கட்டம்.

- Advertisement -

பின்னர் நான் ஐபிஎல் தொடரின் போது காயம் அடைந்தேன். இதற்கு அடுத்து ஐந்து மாதங்கள் கழித்து நான் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை இந்திய அணியில் இருப்பேனா என்று தெரியாது.

எனது தொழில் முறை கிரிக்கெட் வாழ்வில் நிறைய காயங்களை சந்தித்தேன். அதற்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் மறுவாழ்வு காலம் எவ்வளவு கடுமையானது என்று எனக்குத் தெரியும். இவை அனைத்தும் என்னுடைய மனதில் இருந்தது.

எனவே நான் பாசிட்டிவாக இருந்தேன். இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையில் என்னால் விளையாட முடியும் என்று நான் நம்பினேன். இதை வைத்து என்னுடைய விக்கெட் கீப்பிங்கையும் நான் தயார் செய்து கொண்டிருந்தேன். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் தினமும் காலையில் சொல்லிக் கொள்வேன்.

இதுதான் என்னை படுக்கையில் இருந்து தள்ளி, எல்லா கடுமையான சலிப்பான வேலைகளையும் மீண்டும் செய்ய வைத்தது. எனவே இது எனக்கும் அனைவருக்கும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று உங்களுக்குச் சொல்கிறது. சொந்த நாட்டில் உலகக் கோப்பையை விளையாடுவது எனக்கும் எல்லோருக்கும் கனவான விஷயம். இது சிறப்பு வாய்ந்த ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!