“உன்னாலதான் போச்சு.. மாத்திக்கிட்டா மட்டும்தான் உண்டு !” – மருமகன் ஷாகின் அப்ரிடி மீது ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

0
17382
Shaheen

இந்திய அணிக்கு எதிரான தோல்வி பாகிஸ்தான் அணியை மிகப்பெரிய பாதிப்படைய வைத்திருக்கிறது. மேலும் பொதுவாக இந்த தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை வெறுப்படைய வைத்திருக்கிறது.

இதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் பல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகிறார்கள். அதில் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சி வரை இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான குறிப்பிட்ட அந்தப் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் குறிப்பாக இந்திய துவக்க ஆட்டக்காரர்கள், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை குறி வைத்து தாக்கி ஆடினார்கள். இதன் காரணமாக அடுத்து என்ன செய்வது என்று பாகிஸ்தான் அணிக்கு ஒட்டுமொத்தமாக எந்த திட்டமும் இல்லை. அவர்கள் செயல் அற்றவர்களாக களத்தில் நின்றார்கள்.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி பவர் பிளேவில் விக்கெட்டுகள் வரவில்லை என்றால் மிகவும் ஏமாற்றமடைந்தவராக காணப்படுகிறார். மேலும் விக்கெட்டுக்காக பந்துகளை கண்ட இடங்களில் வீசி ரன் தருகிறார். சுப்மன் கில் அவரை அடித்ததும், அவர் பந்துவீச்சில் நிறைய தவறுகளை செய்ய ஆரம்பித்து விட்டார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், ஷாகின் ஷா அப்ரிடியின் மாமாவுமான ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது ” டாஸ் வென்ற பிறகு பாகிஸ்தான் ஏன் முதலில் பந்து வீச தேர்வு செய்தது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். என் பார்வையில் சரியான முறையில் பந்து வீசி இருந்தால், அதாவது நஷீம் ஷா ஆரம்பித்தது போல துவங்கி இருந்தால் சரியான ஒன்றாக இருந்திருக்கும்.

- Advertisement -

ஆனால் ஷாஹின் அப்ரிடி சரியான இடத்தில் பந்தை வீசவில்லை. அவர் லைன் மற்றும் லென்த்தில் தவறு செய்தார். ஆரம்ப ஓவர்களில் ஷாகின் விக்கெட் எடுக்கவில்லை என்றால் அவருக்கு வெறுப்பாக இருக்கிறது. ஏனெனில் ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்தும் அளவுக்கு அவருடைய புகழ் இருக்கிறது.

ஷாகின் தன்னுடைய லைன் மற்றும் லென்த்தில் சீராக இருக்க வேண்டும். இதில் இரண்டொரு ஓவர்கள் சரியாக வீசவில்லை என்றால், சுயமாகக் கோபப்பட்டு கொள்வதற்கு எந்த அவசியமும் கிடையாது. கிரிக்கெட்டில் சாப்ட் கார்னர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவருக்குத் தேவை ரீ போகஸ். அவர் இரண்டாவது ஸ்பெல்லில் வந்த விதம் நன்றாக இருந்தது.

எனவே அவர் குறிப்பிட்ட லைன் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் எப்பொழுதும் ஒரு விக்கெட்டை பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் கிடையாது. நீங்கள் சரியான பகுதியில் பந்தை வீசினால், நீங்கள் விக்கெட் எடுப்பதற்கும் புதிய பந்தில் சிறப்பாக செயல்படுவதற்கும் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!