ஐபிஎல்-ல் செய்த அதே தப்பை உலக கோப்பையிலும் செய்யும் பிசிசிஐ.. ரசிகர்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லையா?

0
174

இந்தியாவில் நடைபெற இருக்கும் 13 வது உலகக்கோப்பை போட்டிகளுக்கான தயாரிப்பில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போதையிலிருந்து மும்முறமாக செயல்பட்டு வருகிறது.

முதல்முறையாக அனைத்து உலகக்கோப்பை போட்டிகளும் இந்தியாவில் வைத்து நடத்தப்பட இருக்கின்றன இதற்கு முன்பு மூன்று முறை இந்தியா உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி இருந்தாலும் அதில் பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை என பல நாடுகள் இணைந்து நடத்தின இந்த முறை தான் உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் மட்டும் வைத்து முழுமையாக நடைபெற இருக்கிறது. மொத்தம் 45 நாட்கள் நடைபெற இருக்கின்ற இந்த போட்டிகள் பத்து இடங்களில் வைத்து 48 போட்டிகள் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து முடிவெடுக்க 12 மாநில கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த வியாழக்கிழமை விவாதித்தார். டிக்கெட்டுகள் விற்பனை மற்றும் அவற்றை வழங்குவது தொடர்பான விதிமுறைகள் பற்றிய விவாதங்களே இந்தக் கூட்டத்தில் முதன்மையாக இருந்தது இந்தக் கூட்டத்தில் ரசிகர்களுக்கான டிக்கெட் மேலாண்மை மற்றும் அவற்றிற்கான திட்டங்களை வரும் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்குமாறு மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது .

மேலும் காம்ப்ளிமென்ட்ரி ஆக வழங்கப்படும் டிக்கெட்டுகளுக்கான திட்டங்களையும் மேலும் ரசிகர்களுக்கான ஜெனரல் கேட்டகிரி டிக்கெட் மற்றும் கார்ப்பரேட் பாக்ஸ் டிக்கெட்டிற்கான விலைகளையும் அவற்றில் காண திட்டங்களையும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் இருக்கக்கூடிய இருக்கைகளின் அளவைக் கொண்டு பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு எவ்வளவு டிக்கெட் ஒதுக்க முடியும் என்பது தொடர்பான விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

டிக்கெட்டுகள் வழங்கப்படுவது குறித்த விவாதத்தின் போது இந்த முறையும் டிக்கெட் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் டிக்கெட் வழங்குவதில் இதற்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட முறையே இந்த முறையும் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பிசிசிஐ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜெய் ஷா தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் விநியோகிக்கப்படாது என்றும் ஆன்லைனில் டிக்கெட்டை பதிவு செய்ய மட்டும் தான் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தாலும் மைதானத்தில் வந்து டிக்கெட் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதோடு மைதானத்தில் தள்ளுமுள்ளு மற்றும் தடியடி போன்றவையும் நடத்தப்பட்டன . இதனால் தற்போதைய பிசிசிஐ யின் அறிவிப்பிற்கு இவர்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பேசி இருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கடந்த முறை நிகழ்ந்தது போன்று இந்த முறை நிகழாது என்றும் டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்தால் டிக்கெட் நிறுவனங்கள் உங்கள் இல்லம் தேடி வந்து டிக்கெட்டை கொடுக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆன்லைனில் டிக்கெட்டை பெற்றுக் கொள்வது போன்று வைத்தால் அதேபோன்று போலீஸ் டிக்கெட்டுகள் அச்சடித்து விற்று விடுவார்கள் என்பதால் டிக்கெட் ரசிகர்களின் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார் . கார்ப்பரேட் பாக்ஸ் டிக்கெட்டுகள் மற்றும் ஒரு சில டிக்கெட்டுகள் மைதானத்தில் நேரடியாக விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் டிக்கெட் வாங்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் உலக கோப்பையின் முதல் போட்டி இந்தியா பாகிஸ்தான் போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .