ஐபிஎல் அணிகள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை.. என்ன நடந்தது?

0
181
BCCI

நடப்பு 17 வது ஐபிஎல் சீசன் மிகவும் சிறப்பாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் வியாகாம் நிறுவனங்களுக்கு பிசிசிஐ விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் ஒரு போட்டிக்கு மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. இந்த நிலையில் பிசிசிஐ கிரிக்கெட் அணிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது.

பிசிசிஐ ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை மிக அதிக தொகைக்கு விற்று இருக்கிறது. உலக அளவில் விளையாட்டு ஒளிபரப்பு உரிம விற்பனையில் ஐபிஎல் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்துமே உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது ஐபிஎல் தொடரில் இருக்கும் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்திருக்கிறார். அந்த நேரத்தில் மட்டுமே ஒரு மில்லியன் பேர் அந்த ஒளிபரப்பப்பட்ட நிகழ்வை பார்த்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் அதை நீக்க சொல்லியும் அவர் நீக்காமல் இருந்திருக்கிறார். பின்பு அவர் கடுமையாக கேட்டுக் கொண்ட பின்பு நீக்கி இருக்கிறார். மேலும் அவருக்கு ஒன்பது லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணத்தால் ஐபிஎல் அணிகள், அணி உரிமையாளர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் யாரும் ஐபிஎல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனிப்பட்ட முறையில் பதிவேற்றம் செய்யக்கூடாது என பிசிசிஐ கூறியிருக்கிறது. அப்படி செய்தால் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் அணிகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் சில குறிப்பிட்ட புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி வழக்கம் போல் தொடர்வதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் போட்டிக்கான அறிவிப்பையும் வழக்கம் போல் வெளியிடலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : உண்மையை உடைத்த கில்கிறிஸ்ட்.. மும்பை இந்தியன்ஸ்க்கு சிக்கல்.. டி20 உலக கோப்பை பிசிசிஐக்கு முக்கியமில்லையா?

இதைத் தாண்டி ஐபிஎல் தொடருடன் சம்பந்தப்பட்ட யாரும் பிசிசிஐ ஒளிபரப்பு உரிமம் தொடர்பான விதிமுறைகளை மீறக்கூடாது என கண்டிப்பாக பிசிசிஐ தெரிவித்துவிட்டது. இது சம்பந்தமான புகாரை ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள் பிசிசிஐ இடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே போட்டி சம்பந்தப்பட்ட வீடியோ அல்லது புகைப்படங்கள் இனி இவர்களிடமிருந்து வெளிவராது!