ஒரே தப்பை 2 முறை செஞ்சு.. WTC கோப்பையை இழந்தோம்.. இனி இப்படி செய்ய போறோம் – ஜெய் ஷா உறுதி

0
330
Jay

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அளித்திருந்த பேட்டியில் பல சந்தேகங்களுக்கு பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து மிக முக்கியமான உறுதி ஒன்றை அவர் கூறியிருக்கிறார்.

இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியில் இடம் சாம்பியன் பட்டத்தை இழந்தது. இந்த இரண்டு முறையும் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பொதுவான ஒரு நாட்டில் நடத்தக்கூடாது எனவும், குறிப்பிட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் எந்த அணி இருக்கிறதோ அந்த அணிக்கு முன்னிலை கொடுக்கும்படி அவர்களுடைய நாட்டில் நடத்த வேண்டும் என கூறப்படுகிறது.

மேலும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த அடுத்த நான்கைந்து நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் சூழல் இருந்து வந்தது. கடந்த முறை ஆஸ்திரேலியா டெஸ்ட் வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று சூழ்நிலைக்கு பழகினார்கள். ஆல் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து செல்ல மிகத் தாமதமானது. இது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பெரிய பின்னடைவை உருவாக்குகிறது.

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் ஜெய் ஷா கூறும் பொழுது ” கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகளின் போதும் இந்திய அணி தாமதமாக செல்ல முடியவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்ததும் உடனுக்குடனே பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. இது இந்திய அணிக்கு சில பாதிப்புகளை உருவாக்கியது.

இதையும் படிங்க : 2வது வீரராக சாதனை.. ரெக்கார்ட் வச்சதுல தனி சந்தோஷம் இருக்கு.. காரணம் இதுதான் – ஷமர் ஜோசப் பேச்சு

ஆனால் இனிமேல் இந்திய அணிக்கு இப்படியான பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஐபிஎல் தொடர் முடிவடைந்து அடுத்து இரண்டு வாரங்கள் அதாவது 15 நாட்கள் கழித்துதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும். நம்மால் இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும், நாம் இரண்டு முறையும் சிறப்பாக செயல்பட்டு இருப்பதற்கு இந்திய அணியை பாராட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -