2வது வீரராக சாதனை.. ரெக்கார்ட் வச்சதுல தனி சந்தோஷம் இருக்கு.. காரணம் இதுதான் – ஷமர் ஜோசப் பேச்சு

0
407
Joseph

தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று கயானா நேஷனல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இளம் சூப்பர் ஸ்டார் ஷமர் ஜோசப் பந்துவீச்சில் அசத்தினார்.

முதல் போட்டி வெற்றி தோல்வி இன்றி டிரா ஆகி இருந்த நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தன் முடிவால் தானே தென் ஆப்பிரிக்கா சிக்கிக் கொண்டது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸ் இல் 100 ரன்கள் எடுப்பதற்கு முன்பாகவே 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. ஆனால் கடைசி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சுதாரித்து விளையாடிய காரணத்தினால், 54 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 14 ஓவர்களில் 4 மெய்டன்கள் செய்து 33 ரன்கள் தந்து 5 விக்கெட் கைப்பற்றினார். கயானா நேஷனல் மைதானத்தில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது கரீபியன் வீரராக சாதனை படைத்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகளும் மிக வேகமாக சரிந்தன. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 97 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் இருக்கிறது. ஷமர்ஜோசப் இன்னும் பேட்டிங் செய்ய வரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது குறித்து பேசி உள்ள ஷமர் ஜோசப் “தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியது மிகவும் சிறப்பான உணர்வாக இருக்கிறது. குறிப்பாக சொந்த நாட்டில் கைப்பற்றியது மிகச்சிறந்த உணர்வு. உண்மையை சொல்வதென்றால் நான் இந்த மைதானத்தில் அதிகம் விளையாடியது கிடையாது. நான் அணிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்தேன்.

இதையும் படிங்க : செலக்டர்ஸ் என்னை நம்பல.. அப்படிப்பட்ட ஆளுங்களதான் நம்பறாங்க.. ஏமாற்றமா இருக்கு – ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

மேலும் அம்மா, அப்பா மற்றும் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் இந்த போட்டியில் நான் விளையாடுவதை பார்த்தது மேலும் சிறப்பான உணர்வாக இருக்கிறது. மேற்கொண்டு ஜேசன் ஹோல்டர் நன்றாக பந்து வீசுவார் என்று உணர்கிறேன். அதே போல நானும் ஜோமல் வாரிக்கனும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவோம். இது ஒருவரை ஒருவர் ஆதரிப்பது சம்பந்தப்பட்டது. அதே சமயத்தில் பேட்டிங் செய்யும்பொழுது ஜேசன் ஹோல்டர்க்கு நாங்கள் சென்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -