சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு… முகேஷ் குமார் பிளேயிங் லெவனுக்குள் வந்தது எப்படி? – ரோகித் சர்மா பேட்டி!

0
625

வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது டெஸ்டில் சர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, பிளேயிங் லெவனுக்குள் முகேஷ் குமார் வந்தது எப்படி? என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியுள்ளது. ஏற்கனவே விளையாடிய முதல் டெஸ்டில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அறிமுகம் ஆகினர். ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் 171 ரன்கள் அடித்து பல சாதனைகளை படைத்தார்.

மற்றொரு அறிமுக வீரர் இஷான் கிஷன் கடந்த போட்டியில் விளையாடுவதற்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பேட்டிங்கில் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தார். அப்போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளர் செய்துவிட்டார். ஆனால் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் என்று நன்றாக செயல்பட்டார்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் இடம் பெற்றிருந்த சர்துல் தாக்கூர் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். சர்துல் தாக்கூர் வெளியில் அமர்த்தப்பட்டு முகேஷ் குமார் உள்ளே வந்ததற்கு என்ன காரணம் என்பதை டாஸ் போடப்பட்டபோது கூறினார்.

- Advertisement -

சர்துல் தாக்கூர் பயிற்சியின்போது காலில் காயம் ஏற்பட்டு தசைபிடிப்பில் உள்ளார். ஆகையால் அவர் இந்த போட்டியில் இடம் பெறவில்லை. மேலும் முகேஷ் குமார் நன்றாக செயல்படுவார் என்று நம்புகிறேன். ஆகையால் அவருக்கு இந்த வாய்ப்பை கொடுப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

முகேஷ் குமார், 39 முதல்தர போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இவரது சராசரி 21.11 மட்டுமே. மேலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது டி20 போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார். விரைவில் அதிலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.