உலககோப்பை ஜெயித்து கொடுத்த கம்மின்ஸ்க்கே இந்த நிலைமையா.. ஆஸி கோச் அதிரடி பேட்டி

0
227
Cummins

2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் சிக்கிய ஆஸ்திரேலியா அணி, மரியாதை ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு புதிய பயிற்சியாளராக வந்த ஜஸ்டின் லாங்கர் தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்று ஆஸ்திரேலியா அணி ஓரளவுக்கு மீண்டு வந்தது. ஆனாலும் பழைய ஆஸ்திரேலிய அணியின் வீரியம் மற்றும் வெற்றிக்காக போராடும் முறைகள் இல்லாமல் இருந்தது.

- Advertisement -

இதனையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் பெய்ன் விலகிய பிறகு புதிய கேப்டனாக வேகபந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் கொண்டுவரப்பட்டார். இவர் பொறுப்பேற்றதற்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு பெரிய வெற்றிகள் கிடைத்தது ஒரு பக்கம் என்றால், இவர் ஆஸ்திரேலியாவின் ஆக்ரோச அணுகுமுறையை மாற்றி, திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் அணியாக கொண்டு வந்தார்.

ஆஸ்திரேலியா வீரர்கள் களத்தில் எதிர் அணி வீரர்களுடன் மோதுவதை விட்டுவிட்டு, தங்களது திட்டங்களை செயல்படுத்துவதில் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்கள். இதனுடைய பலன் கிரிக்கெட் களத்தில் மிக நன்றாகவே எதிரொலித்திருக்கிறது. ஆசஸ் தொடரை தக்கவைத்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது என கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா வெற்றி நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு யார் கேப்டனாக ஆஸ்திரேலிய அணிக்கு இருப்பார்கள்? என்கின்ற பெரிய கேள்வி இருந்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் கூறும் பொழுது “நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் மிட்சல் மார்ஸுக்கு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் தற்போது ஆஸ்திரேலிய டி20 அணியுடன் கேப்டனாக செயல்பட்ட விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின் தலைவருக்கான வீரர் என நினைக்கிறோம். சரியான நேரத்தில் இது குறித்தான முடிவுகள் வரும்.

இதையும் படிங்க : ரஞ்சி பைனலில் சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் சதம்.. 3 நாக்-அவுட் மேட்ச்சிலும் கலக்கல் பேட்டிங்

தற்பொழுது ஸ்மித் டேவிட் வார்னர் இடத்தில் துவக்க வீரராக புதிய நிலையில் விளையாடுகிறார். இதை வைத்து அவரை நாம் மதிப்பிட முடியாது. துவக்க வீரராக ஒரு புதிய வீரரை கொண்டு வந்து நான்கு போட்டிகள் மட்டும் வாய்ப்பு கொடுத்து வெளியே அனுப்பினால் ஏற்றுக் கொள்வீர்களா? நிச்சயமாக அப்படி செய்வது சரியான ஒன்றாக இருக்காது. தற்பொழுது ஸ்மித்துக்கும் அதே நியாயம்தான்” என்று கூறியிருக்கிறார்.