“கேஎல்.ராகுல் ஏன் தவறான சிக்னல்களை கொடுக்கிறார்?” – பிசிசிஐ வட்டாரத்தில் சர்ச்சையான சம்பவம்

0
322
BCCI

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் விளையாடினார்கள். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி தோற்றது.

போட்டி முடிந்த மறுநாளே கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கிடைக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

அடுத்தடுத்த நாட்களில் கேஎல்.ராகுல் திரும்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் ரவீந்திர ஜடேஜா திரும்புவது மிகவும் கடினம் எனக் கூறப்பட்டது.

இப்படியான நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருமே இந்திய அணியில் இடம் பெற்றார்கள். விராட் கோலி இல்லாத நிலையில் இவர்கள் வந்தது அணியை பலமாக்கும் என்றாலுமே, முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முழு உடல் தகுதியை எட்டாத நிலையில் கே எல் ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிகளிலிருந்து விலக்கப்படுகிறார் என்று பிசிசிஐ தெரிவித்தது. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தற்போது அவர் 90% குணமடைந்து பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிப்பில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் அவருடைய இடத்திற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு விளையாடி இந்த வருடம் லக்னோ அன்னிக்கு விளையாட இருக்கும் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டார்.

கேஎல்.ராகுல் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி உள்ள பிசிசிஐ அதிகாரி கூறும் பொழுது “கே.எல் ராகுல் இன்னும் ராஜ்கோட்டில் தன்னுடைய நிலை குறித்து ரிப்போர்ட் செய்யவில்லை. உள்ளூர் வீரரான ரவீந்திர ஜடேஜா தற்போது அணியுடன் இணைந்து இருக்கிறார். ஆனாலும் ரவீந்திர ஜடேஜா முழுவதுமாக குணமடைந்து விட்டார் என்று மருத்துவ குழு நம்பவில்லை.

இதையும் படிங்க : “விராட் கோலி.. இது ஒரு அவமானம்.. இப்படி நடக்கக்கூடாது”- ஸ்டூவர்ட் பிராட் பேட்டி

கே.எல்.ராகுல் காயம் தீவிரமானது என பிசிசிஐ மருத்துவ குழு முன்பே அறிந்திருந்தால், ஏன் அவர் தற்காலிகமாக இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும்? கேஎல்.ராகுல் தான் பேட்டிங் செய்கின்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தவறான சிக்னல்களை வெளியில் தர வேண்டும்?” என கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்பொழுது இந்த விவகாரம் பிசிசிஐ மட்டத்தில் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.