“பிசிசிஐ மோசமாதான் வச்சிருக்கு.. ஆனா நான் இதை சாக்கு சொல்ல போறது கிடையாது!” – ஜோஸ் பட்லர் அதிரடியான கருத்து!

0
1440
Buttler

நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதி வருகின்றன.

இந்த நிலையில் நாளை உலகக் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி காலை 10:30 மணிக்கு இமாச்சல் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மதியம் 2:30 மணிக்கு துவங்க இருக்கிறது. இத்தோடு பாகிஸ்தான் அணி ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி வேறு இடங்களுக்கு செல்கிறது.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே இமாச்சல் பிரதேசம் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் மிக எளிதாக ஆப்கானிஸ்தான் அணியை பங்களாதேஷ் அணி வீழ்த்தி இருந்தது.

அந்தப் போட்டியில் மைதானத்தின் வெளிவட்டத்தில் ஃபீல்டிங் செய்யும் பொழுது, மைதானத்தின் தரைப்பகுதி மிகவும் இலகுவாக இருந்தது. அப்படியே பெயர்ந்து வந்தது. இதனால் டைப் செய்யும் வீரர்களுக்கு பெரிய காயங்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. இது உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.

- Advertisement -

இதுகுறித்து தற்பொழுது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசும்பொழுது “ஆமாம் நான் சில கவலைகள் பற்றி நினைக்கவே செய்கிறேன். தர்மசாலா மைதானத்தில் நிலைமை மோசமாகவே இருக்கிறது. இது என்னுடைய கருத்து. அங்கு ஃபீலிங் செய்யும் பொழுது அல்லது டைவிங் செய்யும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினால், அது அணியாக சேர்ந்து இயங்குவதற்கு எதிரானதாக இருக்கும்.

நாங்கள் அதை ஒரு சாக்காகப் பயன்படுத்த மாட்டோம். மாறாக நாங்கள் அதை மாற்றி அமைப்போம். நீங்கள் ஃபீல்டிங் செய்யும் நேரத்தில் இதை மனதில் வைத்து தடுத்து நிறுத்திக் கொண்டால், அது ஒரு அணியின் வீரராகவோ அல்லது இப்படி ஒரு பெரிய தொடரிலோ இருப்பதற்கான இடம் கிடையாது.

எனவே அங்கு நிலைமை நன்றாக இல்லை. ஆனாலும் அது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கப் போகிறது. மேலும் விக்கெட் அருமையாக தெரிகிறது. நீங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் இருக்கப் போகிறீர்கள். எனவே நீங்கள் ஒரு பந்தை பார்த்தால் தயவு செய்யத்தான் செய்வீர்கள்!” என்று கூறியிருக்கிறார்!