மாட்டிய பிசிசிஐ.. உலக கோப்பையில் பிட்ச் பவுண்டரி தூரம் இப்படித்தான் இருக்கனும்.. ஐசிசி அதிரடி பரிந்துரைகள்!

0
2286
ICC

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமத்தை இந்தியா வைத்திருக்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக உலகக் கோப்பை தொடரை இந்தியா முழுமையாக நடத்துகிறது!

நடக்க இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கு பெறுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதுகின்றன. புள்ளி பட்டியலில் நான்கு இடத்தில் வரும் அணிகள் அரை இறுதியில் மோதுகின்றன. அதிலிருந்து இறுதிப்போட்டி மற்றும் உலக சாம்பியன் அணி கண்டறியப்படுகிறது!

- Advertisement -

இந்தியாவில் உலகக் கோப்பை நடக்கும் அடுத்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பனிப்பொழிவின் தாக்கம் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் விஷயமாக மாறலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக ஐசிசி இந்திய உலகக்கோப்பை மைதானங்களில் ஆடுகளங்களை தயார் செய்யும் பொறுப்பில் இருப்பவர்களிடம், ஆடுகளத்தில் கொஞ்சம் புல் சேர்த்து இருக்குமாறு தயார் செய்ய சொல்லி கேட்டு இருக்கிறது.

இப்படி ஆடுகளத்தில் புல் கொஞ்சம் அதிகமாக இருக்கும் பொழுது, வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் விளையாடும் அணியில் சுழற் பந்துவீச்சாளர்களை அதிகம் சேர்க்க வேண்டியது கிடையாது. ஏனென்றால் பனிப்பொழிவில் சுழற் பந்துவீச்சாளர்களால் பந்தை இறுக்கமாக பிடித்து வீச முடியாது.

- Advertisement -

இந்த விஷயத்தில் ஐசிசி மேலும் ஒரு அதிரடியான முடிவை எடுத்திருக்கிறது. முன்பு குறைந்தபட்சம் பவுண்டரி தூரம் 65 மீட்டரில் இருந்து அதிகபட்சம் 85 மீட்டர் இருக்கலாம் என்ற விதி இருந்தது. தற்பொழுது உலகக் கோப்பைக்கு குறைந்தபட்சம் பவுண்டரி எல்லை 70 மீட்டராக இருக்க வேண்டும் என்று ஐசிசி பரிந்துரை செய்திருக்கிறது.

இதுகுறித்து ஐசிசி தரப்பில் கூறப்படும் பொழுது, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டிகளாக இருக்கும் பொழுதுதான் சுவாரசியமாக இருக்கின்றது. ஹை ஸ்கோர் போட்டிகள் பெரிதாக ரசிகர்களை ஈர்ப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் கடந்த முறை இங்கிலாந்தில் அந்த அணி தான் விளையாடும் அதிரடி முறைக்கு சாதகமாக தட்டையான ஆடுகளங்களை அமைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கூட இறுதியில் ஆடுகளங்கள் மாறவே செய்தன. எனவே இந்தியாவில் ஐசிசி ஆலோசனைப்படி ஆடுகளங்கள் அமைக்கப்பட்டாலும், போட்டி நடக்க நடக்க ஆடுகளங்கள் மெதுவாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!