2024-25.. 5 முக்கிய தொடர்கள்.. உள்நாட்டில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை.. பிசிசிஐ வெளியிட்டது

0
77
BCCI

தற்போது நடைபெற்று வரும் டீ 20 உலகக் கோப்பை தொடருக்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் விளையாடும் ஐந்து முக்கிய தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சற்றுமுன் வெளியிட்டு இருக்கிறது. பங்களாதேஷ் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து என மூன்று அணிகள் இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்கின்றன.

பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த போட்டி அட்டவணையில் மொத்தம் இரண்டு டெஸ்ட் தொடர்கள் மற்றும் இரண்டு டி20 தொடர்கள் அடங்குகின்றன. மேலும் இரண்டு டெஸ்ட் தொடர்களும் அடுத்த 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இடம் பெறுகின்றன. எனவே டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

- Advertisement -

2024 பங்களாதேஷ் அணியின் இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணம்:
முதல் டெஸ்ட் – செப்டம்பர் 19 – சென்னை
2வது டெஸ்ட் – செப்டம்பர் 27 – கான்பூர்
1வது டி20 – அக்டோபர் 6 – தரம்சாலா
2வது டி20 – அக்டோபர் 9 – டெல்லி
3வது டி20 – அக்டோபர் 12 – ஹைதராபாத்

2024 நியூசிலாந்து அணியின் இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணம்:
1வது டெஸ்ட் – அக்டோபர் 16 – பெங்களூரு
2வது டெஸ்ட் – அக்டோபர் 24 – புனே
3வது டெஸ்ட் – நவம்பர் 1 – மும்பை

2025 இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணம்:
1வது டி20 – ஜனவரி 22 – சென்னை
2வது டி20 – ஜனவரி 25 – கொல்கத்தா
3வது டி20 – ஜனவரி 28 – ராஜ்கோட்
4வது டி20 – ஜனவரி 31 – புனே
5வது டி20 – பிப்ரவரி 2 – மும்பை
1வது ஓடிஐ – பிப்ரவரி 6 – நாக்பூர்
2வது ஓடிஐ – பிப்ரவரி 9 – கட்டாக்
3வது ஓடிஐ – பிப்ரவரி 12 – அகமதாபாத்

- Advertisement -

இதையும் படிங்க : 10 வருஷத்துக்கு முன்னாடி.. எனக்கு பண்ணுனத பாபர் ஆசமுக்கு பண்ணாதீங்க.. ஆதரவு தெரிவிக்கும் முகமது ஹபீஸ்

புதிய பயிற்சியாளர் மற்றும் புதிய கேப்டன்கள் உடன் இந்திய அணி பயணிக்க இருக்கின்ற காரணத்தினால், இந்தத் தொடர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றன. மொத்தம் இந்த ஐந்து தொடர்களும் ரசிகர்களுக்கு மிகவும் விருந்தளிப்பதாக இருக்கும்!