“என்சிஏ-வை வைத்து மோசடி நடக்குது.. உஷாரா இருங்க” – பிசிசிஐ வெளியிட்ட அதிரடி தகவல்

0
86
BCCI

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காயம் மற்றும் பயிற்சி அளிக்கும் தலைமை இடமாக பெங்களூரில் அமைந்திருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி என்சிஏ முக்கிய பங்கு வகித்து வருகிறது.

தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சிளர் ராகுல் டிராவிட் முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்திருக்கிறார். இப்போது விவிஎஸ் லட்சுமணன் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்திய வீரர்கள் தங்களுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத பொழுது பயிற்சி செய்யவும் எப்பொழுதும் என்சிஏ அளித்திருக்கும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு பயிற்சி செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றது. அதற்கு தேவையான ஊழியர்களும் நிபுணர்களும் இருக்கிறார்கள். மேலும் தனிப்பட்ட முறையில் தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவ குழுவும் இருக்கிறது.

இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் வசதிகளை தனிநபர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும், அதற்கு குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றும் சில விளம்பரங்கள் வருவதாக பிசிசிஐ கண்டுபிடித்துள்ளதாக கூறியிருக்கிறது.

- Advertisement -

மேலும் இப்படியான விளம்பரங்கள் எதையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும், தாங்கள் வெளிநபர்கள் யாருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியை வசதியை பணத்திற்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

இது குறித்து பிசிசிஐ கூறும் பொழுது “பிசிசிஐ தன்னுடைய தேசிய கிரிக்கெட் அகாடமி வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து எந்த பணத்தையும் வசூலிப்பது கிடையாது. மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நுழைவது என்பது தகுதி அடிப்படையிலானது.

பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள், டார்கெட்டில் இருக்கும் வீரர்கள், மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அடையாளப்படுத்தும் வீரர்கள் ஆகியோருக்கு மட்டுமே தேசிய கிரிக்கெட் அகாடமியில் இடம் அளிக்கப்படும்.

இதையும் படிங்க : “500 விக்கெட் சாதனையை இவருக்கு அர்ப்பணிக்கிறேன்.. அவர்தான் எல்லாமுமாக இருந்தார்” – அஷ்வின் உருக்கம்

இது தனிப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியாது. அப்படியான விளம்பரங்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற போலி மற்றும் மோசடி விளம்பரங்களுக்கு இரையாகி விடாதீர்கள். மேலும் இது சம்பந்தமான தகவல்களுக்கு உங்களுடைய மாநில கிரிக்கெட் சங்கங்களை அணுகுங்கள்” என்று கூறியிருக்கிறது..