கேஎல்.ராகுல் ரூல்ட் அவுட்.. சதங்களாக குவிக்கும் மாற்று வீரர் அறிவிப்பு.. புதிய அணி

0
192
Rahul

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் துவங்குகிறது.

கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று இருந்த கேஎல் ராகுல் உடல் தகுதி பெறாத காரணத்தினால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவர் நான்காவது போட்டிக்கு கிடைப்பதற்கு முன்பாக ஒரு வாரத்திற்கு ஓய்வு தேவை என்று கூறப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் அவர் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கு கிடைப்பார் என்பதும் உறுதி கிடையாது.

இந்த நிலையில் ஏற்கனவே அறிமுக வீரராக இந்த தொடரில் ரஜத் பட்டிதார் விளையாடி வருகின்ற நிலையில், சர்ப்ராஸ் கானுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

அதே சமயத்தில் இந்த முறையும் இந்திய பேட்டிங் யூனிட்டில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின்தான் இருப்பார் என்பது இந்திய பேட்டிங் யூனிட்டுக்கு பெரிய பலவீனம்.

- Advertisement -

ஆனாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இப்படியான பேட்டிங் யூனிட் வைத்துதான் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல்லை கேஎல்.ராகுலுக்கு மாற்று வீரராக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இவர் இந்த வருடத்தில் ரஞ்சித் தொடரிலும் அடுத்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதங்களாக குவித்து வருகிறார். ஒருவேளை கே எல் ராகுல் உடல் தகுதி பெறாமல் இருந்திருந்தால் இவர் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியிலேயே இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.