தீபக் சகர் இடத்துக்கு.. 27 வயது புது ஆல் ரவுண்டரை அறிவித்தது பிசிசிஐ.. பின்னணி என்ன?

0
4247
Deepak

இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதற்கடுத்து கடைசியாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

முதலில் நடைபெறும் இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தீபக் சகர் இடம் பெற்று இருந்தார்.

- Advertisement -

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கின்ற காரணத்தினால், இவரை பௌலிங் யூனிட்டில் வைக்கும் பொழுது பேட்டிங் நீளத்தை அதிகரிக்க முடியும். எனவே இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பியது. இந்த நிலையில் இவருடைய தந்தை மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவர் தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார்.

தற்பொழுது இவரது இடத்தை நிரப்பக்கூடிய வேகப்பத்து வீச்சு ஆல் ரவுண்டர் ஒருவரை கண்டறிய வேண்டிய தேவையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருந்தது. இந்த நிலையில் 27 வயதான பீகாரில் பிறந்து பெங்கால் அணிக்காக விளையாடு வரும் வலது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஆகாஷ் தீப்பை தீபக் சகர் இடத்திற்கு பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இவர் பீகாரில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர். மேலும் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையையும் மூத்த அண்ணனையும் இழந்து, உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம் பெறுவதற்காக மிகக் கடுமையாக போராடி உழைத்து வந்தவர்.

- Advertisement -

இவர் பெங்கால் அணிக்காக உள்நாட்டு தொடர்களில் 80 போட்டிகளுக்கு மேல் விளையாடி 170 விக்கெட்டுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். இவர் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 24 பந்து வீச்சு சராசரியில் 42 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக இவர் 36 பவுண்டரிகள் மற்றும் 46 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஆர் சி பி அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக வீச முடிந்த திறமை கொண்டவர். எதிர்காலத்தில் இவரை உருவாக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்தால், நிச்சயம் இவர் பந்துவீச்சில் தாக்கத்தை தரக்கூடியவராக இருப்பார்!