“அஸ்வின்கிட்ட கத்துக்கோங்க.. விளையாட தெரியாம பாஸ்பால் பின்னாடி ஒளியாதிங்க” – நாசர் ஹுசைன் விமர்சனம்

0
621
Hussain

மார்ச்-7. இங்கிலாந்து அணியின் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம் எதிர்பார்த்தது போலவே அந்த அணிக்கு படுதோல்வியில் முடிய இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் இரண்டாவது இன்னிங்ஸ் மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி தோல்வி அடைந்தது. இல்லையென்றால் இந்திய அணி இந்த தொடரை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்று கைப்பற்றி இருக்க முடியும்.

இங்கிலாந்து அணி உள்நாட்டில் பேட்டிங் செய்வதற்கு தட்டையான ஆடுகளத்தை அமைத்து, அதிரடியாக விளையாடி எதிரணி பந்துவீச்சாளர்களின் மன நம்பிக்கையை உடைத்து, எதிரணி கேப்டனை எப்படி வியூகம் அமைப்பது என தெரியாமல் திணற வைத்து, உளவியலாக வெல்வதை சமீப காலமாக வாடிக்கையாக வைத்திருந்தது.

- Advertisement -

இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான இங்கிலாந்து அணி ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட பொழுதே, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களே அதிரடியான அணுகுமுறை இந்தியாவில் சரிவராது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்ற காரணத்தினால், பாஸ் பால் அணுகுமுறையை விமர்சித்த அத்தனை பேர் வாயும் அடைக்கப்பட்டது.

ஆனால் இதற்குப் பிறகு இங்கிலாந்து அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஏதாவது ஒரு இன்னிங்ஸில் மோசமாக சொதப்பி வரிசையாக தோற்று தோல்வி அடைந்தது. இதனால் மீண்டும் பாஸ்பால் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் மிகக் கடுமையாக இங்கிலாந்து தரப்பில் இருந்தே இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஜாக் கிரௌலி சிறப்பாக மாறிவிட்டார். ஆனால் அவர் தொடர்ந்து சீராக விளையாடினாலும் கூட 50 முதல் 70 ரன்கள் ஆட்டம் இழப்பது தொடர்ந்து வருகிறது. இது அவருக்கு சமீபத்தில் ஏழாவது முறையாக நடந்திருக்கிறது. இதேபோல் நடுவில் வந்து ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக 30 ரன்கள் எடுத்துவிட்டு கிளம்பி விடுகிறார். பென் ஸ்டோக்ஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சை புரிந்து கொள்ள முடியாமலே கடைசியில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

வழக்கம்போல் பென் ஃபோக்ஸ் கடைசி கட்ட பேட்ஸ்மேன்களுடன் சிக்கிக் கொண்டார். நீங்கள் எந்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் உடன் இணைந்து விளையாடினாலும் கூட, நீங்கள் உங்கள் சொந்த ஆட்டத்தை எப்படி மேம்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. பாஸ்பால் அணுகுமுறைக்கு பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது.

இதையும் படிங்க : “உங்களுக்கு எதிரே நிற்கிறாரே இவர்தான்” – படிக்கல்லுக்கு அஸ்வின் பேசிய வைரல் ஆகும் பேச்சு

ஒவ்வொருவரும் தங்களுடைய பேட்டிங் பாணியை மெருகேற்ற தொடர்ந்து உழைக்க வேண்டும். இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரையும் பார்த்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் எப்பொழுதும் தங்கள் பந்துவீச்சில் தொடர்ந்து உழைத்து முன்னேறி வந்திருக்கிறார்கள். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் தங்களை அப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.