உலகக் கிரிக்கெட்டில் 90களின் காலகட்டத்தில் பாகிஸ்தான் ஒட்டுமொத்த அணி ஒரு இந்திய வீரரை பார்த்து பயந்ததாகவும், அவருடைய விக்கெட்டை கைப்பற்றினால் மட்டுமே வெல்ல முடியும் என நினைத்ததாகவும், வாசிம் அக்ரம் இதைக் கூறியிருக்கிறார் என அப்போது விளையாடிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பஷித் அலி பேசியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது பாகிஸ்தான அணிக்கு எதிராக பெரிய ஆதிக்கம் உலக கோப்பையில் செலுத்தினாலும் கூட, ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரையில் மொத்தம் 135 ஆட்டங்களில் இரண்டு அணிகளும் மோதியதில், இந்திய அணி 57 முறையும் பாகிஸ்தான் அணி 73 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. மேலும் ஐந்து ஆட்டங்கள் முடிவு தெரியாமல் போய் இருக்கிறது.
இப்படி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் பொதுவாக இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளும் சந்திக்கும் தொடர்கள் தற்பொழுது நடக்காத காரணத்தினால், இந்திய அணியினால் இந்த வித்தியாசத்தை தற்பொழுது குறைப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.
ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கத்திற்கு மிக முக்கியமாக வேகப் பந்துவீச்சாளர் இருக்கிறார். அவருடைய பந்துவீச்சு ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு நிறைய வெற்றிகளை கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட வாசிம் அக்கரம் இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனை பார்த்து பயந்ததாக, மேலும் மொத்த பாகிஸ்தான் அணியுமே அதை நம்பியதாகவும் பஷித் அலி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பஷித் அலி கூறும் பொழுது “சச்சின் விக்கெட்டை கைப்பற்றுவோம் நாம் ஆட்டத்தில் வெல்வோம் என்று வாசிம் அக்ரம் எப்பொழுதும் சொல்வது உண்டு. சச்சினைப் பார்த்து அவருக்கு எப்பொழுதும் பயம் இருந்தது. சச்சின் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நான் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால் நான் அவருடைய ஆட்டத்தை பார்ப்பேன்.அந்த நேரத்தில் எங்கள் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம் அணிக்கூட்டம், பயிற்சி மற்றும் உணவு மேஜையில் கூட சச்சின் விக்கெட்டை பற்றி எங்களிடம் பேசுவார்.
இதையும் படிங்க: திலக் வர்மாவுக்கு ஆசைப்பட்ட கம்பீர்.. கடைசியில் ரியான் பராக்கிற்கு இடம்.. வெளியான உண்மை காரணம்
சச்சின் அவுட் ஆனவுடன் நாங்கள் வெற்றி பெறுவது எப்பொழுதும் வழக்கமாக இருந்தது. அப்பொழுது பெயர் வாங்கிய அசாருதீன் இருந்த பொழுது கூட நாங்கள் அவருக்கு பயப்படவில்லை. நாங்கள் சச்சினை பார்த்துதான் பயந்தோம். நாங்கள் விளையாடிய காலத்தில் இதுதான் நடந்தது” என்று கூறியிருக்கிறார்.