திலக் வர்மாவுக்கு ஆசைப்பட்ட கம்பீர்.. கடைசியில் ரியான் பராக்கிற்கு இடம்.. வெளியான உண்மை காரணம்

0
289
Riyan

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளிலும் ரியான் பராக் இடம் பிடித்தது பெரிய ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் மிடில் ஆர்டரில் திலக் வர்மாவை தாண்டி ரியான் பராக் இடம் பிடித்ததற்கான காரணம் தற்பொழுது வெளிவந்திருக்கிறது.

இந்திய அணிக்கு பேட்டிங் யூனிட்டில் இருந்து பகுதி நேர ஆப் ஸ்பின்னர் இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு பகுதிநேர ஆப் ஸ்பின்னர் ஆக பெரிய பங்களிப்பை கொடுத்து வருகிறார். இந்திய அணிக்கு இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் என திறமையானவர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பு இருந்து இடது கை பேட்டிங் மற்றும் வலது கை பகுதி நேர ஆப் ஸ்பின்னர் ஆக திலக் வர்மாவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வளர்த்து வந்தது. எனவே இந்திய வெள்ளைப்பந்து இரண்டு அணிகளிலும் திலக் வர்மா இதன் அடிப்படையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திலக் வர்மா இடம்பெற வேண்டிய கோட்டாவில் ரியான் பராக் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக அவரை ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் சேர்த்தது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய பயிற்சியாளர் கம்பீர் திலக் வர்மா போன்ற வீரரை விரும்பினாலும் கூட, ரியான் பராக்கை எதிர்காலத்திற்காக வளர்க்க நினைக்கிறார்கள்.

- Advertisement -

இது குறித்து வெளியான செய்தியில் “திலக் வர்மா தற்போது காயம் கொஞ்சம் சரியாகாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கிறது. அதே சமயத்தில் ரியான் பராக் மிகவும் திறமையான இளம் வீரராக காணப்படுகிறார். மேலும் அவருடைய விளையாட்டு அணுகுமுறை மிகச் சிறப்பாக மாறி இருக்கிறது. அவர் விக்கெட்டில் நேரம் செலவிட்டு விளையாடுகிறார்.

இதையும் படிங்க : இந்திய டீமில் புறக்கணிப்பு.. ஆனா ருதுராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும் அவரால் பந்துவீச்சில் தேவைப்படும் பங்களிப்பை செய்ய முடியும். அவருடைய பந்துவீச்சு முறையில் அவரால் யார்கர் மற்றும் மெதுவான பந்துகள் என வேரியேஷன் காட்ட முடியும். மேலும் மிகக் குறிப்பாக அவர் எல்லோரையும் விட மிகச் சிறந்த பீல்டராக இருக்கிறார். எனவே திலக் வர்மாவை விட ரியான் பராக்கை தேர்வு செய்வதற்கான காரணங்கள் அதிகமாக இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -