பாகிஸ்தான் அணி இந்தியாவை பார்த்து கத்துக்கணும்.. 3வது பந்தையே தெறிக்க விட்ருவாங்க – பசித் அலி விமர்சனம்

0
967
Basit

முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

பாகிஸ்தானில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 252 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 45 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

நியூசிலாந்து இந்தியாவுடன் விளையாடினால் தெரியும்

இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜாவேத்துக்கு நல்ல செயல்முறை திட்டம் இருக்கிறது. ஆனால் அது பாகிஸ்தான் வீரர்களிடம் இல்லை. இது போன்ற ஆடுகளங்களில் எப்படி ரன்கள் எடுக்க வேண்டும்? என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்”

“ஆனால் பாகிஸ்தான் வீரர்களால் இதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் தங்கள் மூளையை பயன்படுத்தி விளையாட வேண்டும். நீங்கள் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி தோற்று இருக்கிறீர்கள். இதே நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார்கள்? என்று பார்ப்பீர்கள்”

- Advertisement -

மூன்றாவது பந்தே அடிப்பார்கள்

“பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விளையாட மாட்டார்கள் என்று தெரிந்த காரணத்தினால் பந்தை நன்றாக தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இதுவே இந்தியாவுக்கு எதிராக நடந்திருந்தால், அந்த அணியின் முதல் ஆறு இடங்களில் விளையாடக்கூடிய எந்த பேட்ஸ்மேனும், அப்படி வீசிய மூன்றாவது பந்தையே வெளியில் தூக்கி அடித்திருப்பார்”

இதையும் படிங்க : கேஎல் ராகுல் ரிஷப் பண்ட் விவகாரம்.. கம்பீர் அகர்கருக்கு இடையே அதிகரிக்கும் மோதல் – வெளியான தகவல்கள்

“மேலும் முதலில் பேட்டிங் செய்வதற்கும் இரண்டாவது பேட்டிங் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது பகார் ஜமான் சிறப்பான முறையில் இரண்டு போட்டிகள் விளையாடி இருந்தார். ஏனென்றால் அவர் முன்னால் இலக்கு இருந்தது. ஆனால் நீங்கள் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது முதல் 15, 20 ஓவர்கள் அங்குள்ள சூழ்நிலையை புரிந்து விளையாடி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -