18 விக்கெட்.. 2 வரலாற்று உலக சாதனைகள்.. 34 ஓவரில் உயிர் வந்த மேட்ச்.. அஸ்வின் ஆட்டம் ஆரம்பம்

0
966
Rohit

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ரோகித் சர்மா அதிரடியாய் டிக்ளர் செய்ய பங்களாதேஷ் அணி தோல்வியை தவிர்க்க போராடுகிறது.

இன்று நான்காவது நாளில் தனது முதல் இன்னிசை தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மோமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்தார். பூம் ரா இந்திய அணிக்கு இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

வரலாறு காணாத டெஸ்ட் போட்டி

இந்த போட்டியில் மூன்று நாட்களை மழை எடுத்துக் கொண்டு விட்டதால் இந்திய அணி மீதம் இருக்கும் நேரத்தை பேட்டிங் பயிற்சியாக எடுத்துக் கொண்டு விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரது கணிப்பையும் தவிடு பொடியாக்கி வெறும் 34 ஓவரில் இந்திய அணி போட்டிக்கு உயிர் கொடுத்து இருக்கிறது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 52 பந்தில் 71 ரன், கேஎல்.ராகுல் 43 பந்தில் 68 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 34.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்திருந்தபோது கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி ஆகிவிட்டது.

- Advertisement -

இரண்டு சிறப்பு உலக சாதனைகள்

இதைத்தொடர்ந்து 52 ரன்கள் பின்தங்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 26 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டை இழந்து இருக்கிறது.இரண்டு விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி தனது பந்துவீச்சில் அதிரடியை ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவரில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. முதல் இன்னிங்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு வேகமாக டிக்ளர் செய்த அணியாக இந்திய அணி உலகச் சாதனை படைத்திருக்கிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200க்கும் மேற்பட்ட ரன்களை ஓவருக்கு 8 ரன்ரேட்டுக்கு மேல் அடித்த ஒரே அணியாகவும் இந்திய அணி சிறப்பு உலகச் சாதனை படைத்திருக்கிறது.

இதையும் படிங்க : 34 ஓவர் 285 ரன்.. அதிரடியாய் டிக்ளர் செய்த ரோகித்.. இந்திய அணியால் வெல்ல முடியுமா?.. கான்பூர் 2வது டெஸ்ட் போட்டி

நாளை தொடரும் போட்டியில் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுகள் சாதகத்தை கொண்டிருப்பதால் வெகு எளிதில் பங்களாதேஷ் அணியை மடக்கி இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட போட்டியை முடிவு நோக்கி 34 ஓவரில் இந்திய அணி தள்ளிய விதம் உலக கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -