“பங்களாதேஷ் டீமும் கேப்டனும் செஞ்சது அசிங்கமானது.. 15 வருஷத்துல..!” – மேத்யூஸ் கடுமையான விமர்சனம்!

0
12729
Matthews

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இரண்டாவது வாரத்தில் இருந்து சூடுப்பிடித்து மிகச் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

இரண்டாவது வாரத்தில் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் இருந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பானது.

- Advertisement -

இதற்கு அடுத்த நாளே நெதர்லாந்து அணி வலிமையான தென் ஆப்பிரிக்க அணியை சாய்த்ததும் இன்னும் உலகக் கோப்பை தொடருக்கு பெரிய உயிர் வந்தது போல் மாறியது.

இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி சிறப்பான முறையில் உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் மாற்றங்களை உண்டாக்கியது.

மேலும் நெதர்லாந்து அணியும் கடைசியாக கொல்கத்தாவில் வைத்து பங்களாதேஷ் அணியை வீழ்த்தி, 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற கடும் போட்டியை கொடுத்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இரண்டு அணிகளான பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்ட போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது.

இப்படியான சூழ்நிலையில் இதுவரையிலான சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் என்கிற ரீதியில் எந்த பேட்ஸ்மேனும் ஆட்டம் இழந்து இருக்காத போது, எந்த விவாதத்தையும் கவலைப்படாமல் பங்களாதேஷ் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மேத்யூஸ்க்கு அப்பீல் செய்து விக்கெட்டை பறித்தார். இது இந்த போட்டியை மட்டுமல்லாமல் நடப்பு உலகக் கோப்பையையும் மேற்கொண்டு சுவாரசியமாக இருக்கிறது.

இது வெளியில் எப்படியான விவாதங்களை கிளப்பினாலும் அது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என பங்களாதேஷ் கேப்டன் கூறிவிட்டார். மேலும் தன்னுடைய அணியின் வெற்றி மட்டுமே தனக்கு முக்கியம் என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் இதில் பாதிக்கப்பட்ட மேத்யூஸ் பேசும்பொழுது “இந்த விஷயத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பங்களாதேஷ் அணி மற்றும் அதன் கேப்டன் ஷாகிப் நடந்து கொண்ட விதம் மிகவும் அவமானகரமானது.

அந்த நேரத்தில் கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாமல் நடந்து கொண்டார்கள். இதுவரையில் 15 ஆண்டுகளாக நான் விளையாடிய எதிரணிகளில் இப்படி ஒரு அணியை நான் பார்த்ததில்லை. இது மிக மோசமான அணியாக இருக்கிறது!” என்று மிக காட்டமாகப் பேசியிருக்கிறார்!