பங்களாதேஷ் மாஸ்டர் பிளான்.. தமிழக வீரரை தட்டி தூக்கியது.. காரணம் என்ன? உலக கோப்பைக்கு பரபர தயாரிப்பு!

0
9823
Bangladesh

நடந்து முடிந்த ஆசிய கோப்பையின் ஆரம்பம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு நல்ல ஒரு விஷயமாக அமையவில்லை.

அதே சமயத்தில் இரண்டாவது சுற்றின் கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணி இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

- Advertisement -

இந்த வெற்றி பங்களாதேஷ் அணியை உலக கோப்பைக்கு முன்பாக உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கும், அவர்கள் உலகக் கோப்பையில் நம்பிக்கை உடன் பங்கேற்பதற்கும், ஒரு உந்துதலாக அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் மூத்த வீரர் தமிம் இக்பால் தலைமையில் பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை தயார் செய்து வந்த நிலையில், அவர் திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

இதற்கு அடுத்து ஆசியக் கோப்பை க்கு தட்டு தடுமாறி உள்ளே வந்த பங்களாதேஷ் அணி, எந்தவித திட்டங்களும் இல்லாமல் மிக எளிதாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அந்த அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது பங்களாதேஷ் அணி உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இந்தியா வருகிறது.

இந்த நிலையில் பங்களாதேஷ் அதிரடியாக தனது தொழில்நுட்ப குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை சேர்த்திருக்கிறது.

ஏனென்றால் அவருக்கு இங்குள்ள வானிலை மற்றும் ஆடுகளங்களின் தன்மை குறித்து மிகத் தெளிவாக தெரியும். மேலும் அவர் இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் பயிற்சியாளர் குழுவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் தொழில்நுட்ப குழுவில், ஆறு வருடங்கள் அந்த அணியுடன் இருந்திருக்கிறார். அவருக்கு பயிற்சி பொறுப்பில் மிகுந்த அனுபவம் இருக்கிறது.

பங்களாதேஷ் அணி தனது முதல் ஆட்டத்தில் இமாச்சல் பிரதேச மைதானத்தில் அக்டோபர் ஏழாம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மோதுகிறது. இதற்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக இந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி அசாம் மாநில கவுகாதியில் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பங்களாதேஷ் அணியுடன் இணைகிறார்.

இது தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தொழில்நுட்ப ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் சேர்ந்திருக்கிறார். அவரிடமிருந்து நாங்கள் நிறைய தொழில்நுட்ப தகவல்களை பெறுவோம். இந்தியாவில் வானிலை மற்றும் அனைத்து விக்கெட்டுகள் பற்றியும் அவர் அறிவார். அதனால் அந்த அனுபவத்தை அவர் எங்களுடன் பகிர்ந்து கொள்வார். எங்கள் அணியில் மிகச் சிலரே இந்தியாவில் விளையாடி இருக்கிறார்கள். இதனால் அவரது உள்ளீடு மிக முக்கியமானதாக இருக்கும்!” என்று கூறப்பட்டிருக்கிறது!