டி20 உலகக் கோப்பை 2024

நாங்க ஒன்னு கணக்கு போட்டோம்.. ஆனா இந்திய பேட்ஸ்மேன்கள் அத மொத்தமா உடைச்சி போட்டுட்டாங்க – நஜ்முல் சாண்டோ பேட்டி

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், நேற்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி கொண்ட போட்டியில் பங்களாதேஷ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.தோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாண்டோ பேசியிருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. ஆடுகளம் நன்றாக இருக்கிறது என்று கூறிய பங்களாதேஷ் கேப்டன் டாஸ் வென்று வித்தியாசமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். பங்களாதேஷ் அணியின் இந்த பின்வாங்கும் முடிவுக்கு இந்தியா பேட்ஸ்மேன்கள் சரியான பதிலடி கொடுத்தார்கள்.

இந்திய பேட்டிங் யூனிட்டில் விராட் கோலி 28 பந்தில் 37 ரன்கள், ரிஷப் பண்ட் 24 பந்தில் 36 ரன்கள், சிவம் துபே 24 பந்தில் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா அவுட் ஆகாமல் 27 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி சாதாரணமாக 196 ரன்களை எட்டியது. மேலும் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் உடன் விளையாடுவதற்காக ஒரு வேகப்பந்துவீச்சாளரையும் குறைத்து இருந்தார்கள்.

இந்த நிலையில் இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு கடைசியாக அணியின் கேப்டன் நஜ்முல் சாண்டோ மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 32 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் அணியால் 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் தோல்விக்கு பின் பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் நஜ்முல் சாண்டோ கூறும்பொழுது “இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது நாங்கள் 160 முதல் 170 ரன்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இந்த அளவிற்கு நாங்கள் இந்திய அணியை கட்டுப்படுத்தி இருந்தால் எங்களுக்கு நன்றாக இருந்திருக்கும். ஆனால் முழு பெருமையும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு போக வேண்டும். அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடி மாற்றி விட்டார்கள்.

இதையும் படிங்க : சதம் அரைசதம் எல்லாம் மேட்டரே கிடையாது.. எனக்கு அந்த விஷயம் மட்டும்தான் முக்கியம் – ரோகித் சர்மா பேச்சு

பொதுவாக வீரர்களுக்கு வானிலை தொடர்பாக காற்று போன்றவற்றால் எந்த பாதிப்பும் இருக்காது. ஏனென்றால் இதற்கெல்லாம் வீரர்கள் பழகியவர்கள். நாங்கள் 190 ரன்கள் தாண்டி துரத்தும் பொழுது நல்ல இன்டென்ட்டை காட்டி இருக்க வேண்டும். எங்களுடைய பேட்டிங் போதுமான அளவுக்கு இல்லை. நான் இன்று ஓரளவுக்கு ரன்கள் எடுத்தேன். ஆனால் போட்டியை முடிக்கும் அளவுக்கு விளையாட வேண்டும். தன்சிம் சாகிப் பந்து வீட்டில் சிறப்பாக இருந்தார். நாங்கள் நீண்ட நாட்களாக ஒரு லெக் ஸ்பின்னரை தேடிக் கொண்டிருந்தோம். அதில் எங்களுக்கு சிறந்தவராக ரியாத் ஹுசைன் கிடைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

Published by