டி20 உலகக் கோப்பை 2024

எங்க பேட்டர்ஸ் தெளிவா ஒரு விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க.. இந்த பிட்ச்ல இதைத்தான் செய்தேன் – அக்சர் படேல் பேட்டி

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அக்சர் படையல் ஆட்டநாயகன் விருது வென்றார். அப்பொழுது போட்டியில் தன்னுடைய திட்டங்கள் என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 39 பந்தில் 57 ரன்கள் சூரியகுமார் யாதவ் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஜோஸ் பட்லர் ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி என முக்கிய மூன்று விக்கெட்டுகளை மூன்று ஓவர்களில் தொடர்ந்து வீட்டில் அக்சர் படேல் இந்திய அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுத்தார்.

மேலும் இன்றைய போட்டியில் கடைசி நேரத்தில் ஜடேஜா உடன் 12 பந்தில் 24 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 6 பந்துகள் சந்தித்து 10 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் நான்கு ஓவர்களுக்கு 23 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்த தொடர் முழுக்கவே இவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்று அக்சர் படேல் பேசும்பொழுது “நான் கடந்த காலங்களில் பவர் பிளேவில் பந்து வீசி இருக்கிறேன். எனவே நான் பவர் பிளேவில் பந்து வீச வேண்டும் என்பது திட்டமாக இருந்தது. இந்த ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது எனவே நானும் பந்தை மெதுவாக வீச முயற்சி செய்தேன். இது எனக்கு நன்றாக வேலை செய்தது. நான் வேகமாக பந்து வீசி இருந்தால் நிச்சயம் அவர்கள் ரன் அடித்திருப்பார்கள். அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கும்.

இதையும் படிங்க : என் மனசுல இருக்கிற இதை டீம்ல சொல்ல மாட்டேன்.. கோலிகிட்ட ஒரு விஷயம் போதும்.. பிளான் இதுதான் – ரோகித் சர்மா பேட்டி

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை எனவும், இன்று 160 ரன்கள் சரியாக இருக்கும் எனவும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். எங்களுடைய பேட்டிங்கின் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது. அவர்கள் சரியான நேரங்களில் பவுண்டரி அடித்து மேலும் சிறப்பாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தார்கள். இப்போதைக்கு இறுதி போட்டி பற்றி நினைக்காமல் கிடைத்த ஆட்டநாயகன் விருதை கொண்டாடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

Published by