டி20 உலகக் கோப்பை 2024

என் மனசுல இருக்கிற இதை டீம்ல சொல்ல மாட்டேன்.. கோலிகிட்ட ஒரு விஷயம் போதும்.. பிளான் இதுதான் – ரோகித் சர்மா பேட்டி

நடப்பு டி20 உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இந்திய அணியின் வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் ரோகித் சர்மா 39 பந்துகளில் 57 ரன்கள்,சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அணியை விட்டார்கள். இந்திய அணி 7 இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்தப் போட்டியில் வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா “இந்தப் போட்டியில் ஒரு யூனிட் ஆக சேர்ந்து விளையாடி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தோம். கண்டிஷனுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்துக் கொண்டு. வீரர்கள் கண்டிஷனுக்கு தகுந்தபடி விளையாடினால் விஷயங்கள் சரியாக அமையும். நாங்கள் எப்படி இறுதிப் போட்டிக்குள் வந்தோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் 140 முதல் 150 ரன்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் வர அங்கிருந்து இன்னும் 25 ரன்கள் கூடுதலாக எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். என் மனதில் எப்பொழுதும் ஆடுகளத்திற்கு தேவையான ரன்கள் பற்றி ஒரு இலக்கு இருக்கும். ஆனால் நான் இதை வீரர்களிடம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய உள்ளுணர்வின்படி விளையாட கூடியவர்கள். ஆனால் 170 ரன்கள் இந்த விக்கெட்டில் மிகவும் நல்ல ரன் என்று எனக்கு தெரியும். குல்தீப் அக்சர் இருவரும் சிறப்பான பவுலர்கள். அவர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று தெரியும்.

இதையும் படிங்க : 103 ரன்.. இங்கிலாந்தை அசால்டாக சுருட்டி இந்தியா ரிவென்ச் .. பைனலுக்கு 10 வருடம் கழித்து தகுதி

விராட் கோலி ஒரு தரமான வீரர். எல்லா வீரர்களுக்கும் இப்படியான நிலைமைகள் உண்டு. அவருடைய கிளாஸ் எப்படிப்பட்டது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவருடைய பார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவரிடம் அடித்து விளையாட வேண்டும் என்கின்ற நோக்கம் இருக்கிறது. அதுவே எனக்கு போதுமானது. அமைதியாக இருப்பது நல்ல முடிவுகளை எடுக்க வைக்கும். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Published by