டி20 உலகக் கோப்பை 2024

103 ரன்.. இங்கிலாந்தை அசால்டாக சுருட்டி இந்தியா ரிவென்ச் .. பைனலுக்கு 10 வருடம் கழித்து தகுதி

ஐசிசி 2வது டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் டிரினிடாட் கயானா மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு சுருட்டி இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த விராட் கோலி 9 பந்துகளில் 9 ரன்கள், ரிஷப் பண்ட் 6 பந்தில் நான்கு ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். மழை ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்க இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அணியை மீட்டார்கள். இந்த ஜோடி 50 பந்தில் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 39 பந்துகளில் 57 ரன்கள், சூரியகுமார் யாதவ் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கடுத்து கடைசிக் கட்டத்தில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 9 பந்தில் 17* ரன்கள், அக்சர் படேல் 6 பந்தில் 10 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் பெரிய நெருக்கடியை உருவாக்கினார்கள். அக்சர் படேல் பந்துவீச்சில் கேப்டன் பட்லர் ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி என மூவரையும் வரிசையாக வெளியேற்றினார். பும்ரா தன் பங்குக்கு அபாயகரமான பின் சால்டை அனுப்பினார். குல்தீப் யாதவ், ஹாரி புரூக், சாம் கரன் ஆகியோரை ஆட்டம் இழக்கு செய்தார்.

இதையும் படிங்க : அஸ்வின் நீங்க கிரிக்கெட் சயின்டிஸ்ட்தான்.. அக்சர் படேல் கலக்கல்.. ரோகித் மாஸ் கேப்டன்சி

இதைத்தொடர்ந்து லிவிங்ஸ்டன் மற்றும் ஆதில் ரஷீத் இருவரும் ரன் அவுட் ஆனார்கள். கடைசி விக்கட்டாக ஜோப்ரா ஆர்ச்சர் 15 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து சுருண்டது. இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய தரப்பில் அக்சர் படேல் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகள், பும்ரா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

Published by