பங்களாதேஷை விட சிஎஸ்கேவுக்கு விளையாடறதையே முஸ்தபிசுர் என்ஜாய் பண்றாரு.. காரணம் இதுதான் – சோரிஃபுல் இஸ்லாம் பேட்டி

0
179
Mustafizur

2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொண்ட முதல் போட்டியில், சிஎஸ்கே அணிக்காக முதல்முறையாக விளையாடும் முஸ்தஃபிசூர் ரஹமான் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அங்கிருந்து அவர் தற்பொழுது வரை மொத்தமாக 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். பங்களாதேஷ்க்கு விளையாடுவதை விட சிஎஸ்கே அணிக்கு அவர் என்ஜாய் செய்து விளையாடுவதாக பங்களாதேஷ் வீரர் சோரிஃபுல் இஸ்லாம் கூறியிருக்கிறார்.

நீண்ட நாட்கள் கழித்து சிஎஸ்கே அணி இரண்டு வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடும் அளவுக்கு, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரனா இருவரும் சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமான பந்துவீச்சாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, சொந்த நாட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக மே ஒன்றாம் தேதி நாடு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவுகளை உருவாக்கும்.

மிக முக்கியமாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவரின் உடல் தகுதியில் கவனம் செலுத்தும். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை முடிந்தவரை அதிகப் போட்டிகளில் விளையாட வைக்கவே பார்க்கும் என்ற காரணத்தினால் மிக முக்கியமாக அவரை நாடு திரும்ப பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோரிஃபுல் இஸ்லாம் இதுகுறித்து பேசும்பொழுது “நான் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளை மட்டும் இல்லாமல் ஒவ்வொரு பந்தையும் பார்க்கிறேன். அவரிடம் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் தொலைபேசி வழியாக அந்த போட்டி குறித்து பேசுகிறேன். பங்களாதேஷ் அணிக்கு விளையாடுவதை விட சிஎஸ்கே அணிக்கு விளையாடுவதை அவர் என்ஜாய் செய்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி கிட்ட இந்த விஷயத்துல கேள்வி கேட்காதிங்க.. கெயிலை விட அவர் பெரிய ஆளு – இர்பான் பதான் பேட்டி

காரணம் பங்களாதேஷ் அணிக்கு விளையாடும் பொழுது நிறைய அழுத்தம் இருக்கிறது. ஐபிஎல் அப்படியான அழுத்தங்கள் எதுவும் இல்லை. மேலும் அவர் இந்த அழுத்தத்தின் காரணமாக கடந்த சில போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்காக சரியாக விளையாட முடியாமல் போய் இருக்கலாம். தேசிய அணிக்காக விளையாடும் பொழுது இருக்கும் அழுத்தம் அவருடைய செயல் திறனை பாதித்திருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.