BANvsSL.. களத்தில் மீண்டும் பிரச்சனை.. 8 விக்கெட்.. இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணி பதிலடி

0
434
Srilanka

சமீப காலத்தில் கிரிக்கெட் களத்தில் உணர்ச்சிவசப்பட்டு மோதிக் கொள்ளக்கூடிய அணிகளாக பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இருந்து வருகின்றன. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் மேத்யூஸ் பங்களாதேஷ் அணியால் டைம் அவுட் முறையில் ஆட்டம் விளக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இலங்கை அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இறுதி ஓவரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி மீண்டும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாடோ 7 பந்துகள் சந்தித்து ரன் இல்லாமல் வெளியேறினார்.

இதற்கு அடுத்து குசால் மெண்டிஸ் 36, கமிந்து மெண்டிஸ் 37, சரித் அசலங்கா 28, அஞ்சலோ மேத்யூஸ் 32, சனகா 20 ரன்கள் எடுக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க வேண்டிய நெருக்கடியில் இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 36, சௌமியா சர்க்கார் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நஜிபுல் சாந்தோ ஆட்டம் இழக்காமல் 38 பந்தில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள், தவ்ஹீத் ஹ்ரிடாய் 25 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் ஆட்டம் இழக்காமல் 32 ரன்கள் எடுக்க, பங்களாதேஷ அணி 18.1 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்பொழுது தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கிறது.

இந்த போட்டியில் சௌமியா சர்க்கார் பேட்டிங் செய்த பொழுது, பினுரா பெர்னாடோ பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். கள நடுவர் இதற்கு அவுட் கொடுத்தார். இதையடுத்து பங்களாதேஷ் மூன்றாவது நடுவரிடம் சென்றது.

இதையும் படிங்க : “அஸ்வின் போன் பண்ணி கேட்டார்.. எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் தலைகீழா மாறிடுச்சு” – ரோகித் சர்மா பேட்டி

பந்து பேட்டை தாண்டும் பொழுது ஸ்நிக்கோ மீட்டரில் அதிர்வுகள் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று மறுத்துவிட்டார். இதன் காரணமாக களத்தில் கொஞ்ச நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அணியினர் கள நடுவர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை பங்களாதேஷ் அணி போட்டி என்றாலே பிரச்சனை இல்லாமல் முடிவதில்லை என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.