“அஸ்வின் போன் பண்ணி கேட்டார்.. எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் தலைகீழா மாறிடுச்சு” – ரோகித் சர்மா பேட்டி

0
422
Rohit

நாளை இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாக களம் இறங்குகிறார்.

ஒரு கிரிக்கெட் வீரரின் கனவு என்பதே தமது அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால் ஒரு வீரர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார் என்றால், அது திறமை ரீதியாகவும், உடல் மனரீதியாகவும் மிகப் பெரிய விஷயம். மேலும் அந்த வீரருக்கு தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் அது ஒரு மகுடம்.

- Advertisement -

நாளை இந்த சிறப்பை எட்ட இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நாளைய போட்டிக்கும் முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் அஸ்வினுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இருவரும் சிறுவயதில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது “நூறாவது டெஸ்ட் என்கின்ற மைல் கல்லை எட்டியதற்காக முதலில் நான் அவரை வாழ்த்த விரும்புகிறேன். இதில் அவர் உழைப்பின் பலனை பார்த்தால் மிகச் சரியானதாக இருக்கும். நான் அவரை நீண்ட காலமாக பார்த்து வருகிறேன்.

நாங்கள் இருவரும் 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிகளில் இருந்து தொடர்ந்து விளையாடி வருகிறோம். அப்போது அவர் பேட்ஸ்மேனாக தொடக்க வீரராக இருந்தார். பின்புதான் அவர் பந்துவீச்சாளராக மாறினார். நான் அப்போது பந்து வீசிக் கொண்டிருந்து பிறகு பேட்ஸ்மேனாக மாறினேன். எல்லாமே தலைகீழாகப் போய்விட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு இது நன்மையாக நடந்திருக்கிறது.

- Advertisement -

அவர் ஒரு கிரிக்கெட் வீரராக எப்படி உருவாகி வந்தார் என்பதை நான் இத்தனை நாட்களாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு ஆட்டத்தைப் பற்றி அவ்வளவு புரிதல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர் உங்கள் அணியில் இருந்தால் நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டிய தேவையே கிடையாது. அவர் கையில் பந்தை கொடுத்தால் அவரை ஃபீல்டிங் அமைத்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடுவார்.

மேலும் மைதானத்தில் செயல்படுவதை நாம் பார்ப்பதை தவிர்த்து வெளியில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அது அவர் களத்திற்கு வெளியே தனது பந்துவீச்சில் வேலை செய்யும் விஷயங்கள். போட்டிக்கு முன்பாக கூட ஒற்றை ஸ்டெம்பை வைத்து குறைந்தது 40 நிமிடங்களுக்கு மேலே பந்து வீசிக் கொண்டு இருப்பார். அஸ்வின் அணிக்கு வந்ததிலிருந்து இதைச் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் அணிக்கான வீரர் என்பதுதான் முக்கியமான விஷயம். ராஜ்கோட் டெஸ்டின் பொழுது நாங்கள் அதைப் பார்த்தோம். அது அவருக்கு மிகவும் கடினமான சூழ்நிலையாக இருந்தது. ஆனால் அப்போது அவர் என்னை அழைத்து தான் மீண்டும் அணிக்கு வந்து ஏதாவது செய்ய விரும்புவதாக கூறினார்.

இதையும் படிங்க : ” சிஎஸ்கே கான்வே விஷயத்தில் தப்பு பண்ணிடாதிங்க.. நாக் அவுட்ல மாட்டிக்குவிங்க” – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

இப்படியான விஷயங்களை எல்லாம் நீங்கள் வீரர்களிடம் அரிதாகவே பார்க்கிறீர்கள். உங்கள் இது போன்ற வீரர்கள் இருந்தால், நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.