“பட்டுச்சு.. ஆனால் படல!” – சர்ச்சையான சுப்மன் கில் அவுட்டுக்கு வித்தியாசமாக உருட்டிய ரிக்கி பாண்டிங்!

0
7357

சுப்மன் கில்லுக்கு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையான விவகாரத்தில் வித்தியாசமான கருத்தை தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் முதல் இன்னிங்சில் விளையாடி முடித்தபிறகு, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்திருந்தது. இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் துவங்கிய ஆஸ்திரேலியா அணி லபுஜானே விக்கெட்டை துவக்கத்திலேயே இழந்தது. அடுத்ததாக கிரீன்(25), ஸ்டார்க்(41) ஆகியோரும் சிறிது நேரம் களத்தில் நின்று பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்திருந்தார். கேப்டன் பாட் கம்மின்ஸ் அவுட்டானபின் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்து, 443 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளேர் செய்தது.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க ஜோடி 41 ரன்கள் அடித்திருந்தபோது, சுப்மன் கில் அடித்த பந்தை கேமரூன் கிரீன் பிடித்தார். இதற்கு விக்கெட் கேட்கப்பட்டது. மூன்றாவது நடுவரிடம் சென்ற இந்த முடிவை ரீ-ப்ளைவில் பார்க்கையில் பங்கு கீழே பட்டது போல தெரிந்தது. ஆகையால் அவுட் இல்லை என்று 3ஆம் நடுவர் கொடுப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அதிர்ச்சிகரமாக அவுட் என்று கொடுத்தார்.இந்த விவகாரம் பெரிய சர்ச்சையில் முடிந்தது.

- Advertisement -

இது குறித்து முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் விமர்சனங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்தை தெரிவித்தது சற்று கோபமடைய வைத்திருக்கிறது. ரிக்கி பாண்டிங் பேசியதாவது:

“கேமரூன் கிரீன் 6-8 இன்ச் கள் மேலே பிடித்துவிட்டார். ஆனால் பிடித்தபடியே கையை கீழே கொண்டு சென்று விட்டார். அதனால் கீழே பட்டது என்கிற வகையில் களத்தில் இருந்த நடுவரிடம் ரோகித் சர்மா விவாதித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் பந்து பிடிக்கப்பட்டுவிட்டது. இதனால் தான் கில் சற்று ஏமாற்றத்துடன் காணப்பட்டார். ஆனால் இங்கு இருக்கும் சர்ச்சை எல்லாம், பிடிக்கப்பட்டபிறகு பந்து கீழே உரசியதா? என்பதுதான். நன்றாக பிடித்துவிட்டார் என்பதால் தான் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்திருக்கிறார். கீழே பட்டாலும் அடியில் கை இருந்ததால் தான் நடுவரும் அப்படி கொடுத்திருக்கலாம். மற்றவை எல்லாம் சர்ச்சைக்காக பேசப்படுபவை.” என்று ரிக்கி பாண்டிங் பட்டும் படாமல் பதில் கூறியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.