“மோசமான அமைப்பு மோசமான பிளானிங்.. வீரர்களுக்கு பாதுகாப்பு இல்ல!” – முகமது ஹபீஸ் பிசிசிஐ மீது கடுமையான தாக்கு!

0
417
Hafiz

13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக நடத்தப்படுகிறது.

இதற்காக பத்து மைதானங்கள் தயார் செய்யப்பட்டு, 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டிகளுக்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வருகிறது.

- Advertisement -

அதேசமயத்தில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அட்டவணை அறிவிப்பதில் சில குளறுபடிகள் ஏற்பட்டன. அறிவிக்கப்பட்ட அட்டவணை மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது.

இதற்கு அடுத்து உலகக் கோப்பை டிக்கெட் குறித்த பிரச்சினைகள் வெளியே வந்தன. பிறகு அவை அப்படியே யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது.

மேலும் உலகக் கோப்பைத் தொடர் நடத்தப்படும் மைதானங்களில் ஒன்றான இமாச்சல் பிரதேஷ் தர்மசாலா மைதானத்தில் அவுட்ஃபீல்டு மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் வீரர்கள் பெரிய காயங்களுக்கு உள்ளாக நேரலாம்.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கூறும்பொழுது “நாங்கள் நான்கு நாட்களில் மொத்தமாக உலகக் கோப்பையை பார்த்தோம். இதுவரை மோசமான ஒழுங்கமைப்பையும், மோசமான திட்டமிடலை மட்டுமே பார்த்து இருக்கிறோம். இந்த உலகக் கோப்பையின் இரண்டாவது பெரிய பிரச்சனை தொடருக்கு மக்கள் வரவேற்பு தரவில்லை.

இப்படிப்பட்ட ஒரு உலகளாவிய நிகழ்வை நீங்கள் நடத்துகின்ற பொழுது, நீங்கள் பெரிய அளவில் முடிவுகளையும் எடுக்க வேண்டும். சிறிய மனப்பான்மையுடன் பெரிய முடிவுகளை எப்பொழுதும் எடுக்கவே முடியாது.

தர்மசாலா மைதான அவுட்பீல்ட் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகும். அது வீரர்களுக்கு பாதுகாப்பானது கிடையாது.

இதேபோல் ரசிகர்கள் உலகத்தில் எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. ஒவ்வொரு அணியின் ரசிகர்களுக்கும் விசா கிடைக்க வேண்டும். இப்படியான பெரிய நிகழ்வில் உலகளாவிய முறையில் சமாளிக்க முடியாவிட்டால், அதன் தாக்கம் உலகளாவிய வகையில் இருக்காது!” என்று கூறியிருக்கிறார்!