“பாபர் அசாம விராட் கோலி கூட கம்பேர் பண்ணலாமா?” – பாகிஸ்தான் சேஷாத் தரமான பதில்!

0
320

பாகிஸ்தான் கிரிக்கெட்டில், இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியை பார்த்ததைப் போல பார்க்கப்பட்ட ஒரு வீரராக அஹமத் சேஷாத் இருந்தார். ஆனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை யாரும் விரும்பாத வகையில் சோகமாக முடிவுக்கு வந்து விட்டது.

ஆரம்பத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி பரவலாக அறியப்பட்டதை விட மிக வேகமாக அகமத் சேஷாத் அறியப்பட்டவராக இருந்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்கால பேட்ஸ்மேனாக அவரை முன்னிறுத்தினார்கள். ஆரம்பத்தில் அவரிடம் இருந்தும் சில இன்னிங்ஸ்கள் அப்படி வந்தது. ஆனால் அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய பேட்டிங் சரிந்து, ஒரு கட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டார்.

இதற்கு அடுத்துதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாபர் அசாமின் காலம் ஆரம்பித்தது. அவர் சிறப்பாக செயல்பட ஆரம்பித்ததும் உடனே அவரை விராட் கோலி உடன் ஒப்பிட ஆரம்பித்தார்கள். தற்பொழுது விராட் கோலி மீண்டும் திரும்பி வந்து மிகச் சிறப்பான முறையில் விளையாடிக் கொண்டிருக்க, பாபர் அசாம் மிகவும் தடுமாற்றமான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்.

இந்த நிலையில் பாபர் அசாமை விராட் கோலி உடன் ஒப்பிடலாமா என்பது குறித்து அகமத் சேஷாத் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மிகவும் நியாயமான பதிலை அகமத் சேஷாத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவருமே நல்ல வீரர்கள். ஆனால் விராட் கோலி உடன் யாரையும் ஒப்பிட கூடாது. அவர் நீண்ட காலமாக சிறந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அமைதியாக தங்கள் வேலையை செய்யும் சில வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில வீரர்கள் உலகையே கைப்பற்றுகிறார்கள்.

விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன். விராட் கோலியை பாபர் அசாம் மட்டுமல்ல யாருடனுமே ஒப்பிட முடியாது. அப்படி செய்வது தவறான ஒன்று. நீங்களே அனைத்து வடிவங்களிலும் விராட் கோலி எப்படி விளையாடி இருக்கிறார் என்று பாருங்கள்.

பல ஆண்டுகளாக விராட் கோலி தன்னை வளர்த்துக் கொண்ட விதம் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அம்சத்திலும் தெரியும். அவர் விளையாடும் விதம் மட்டும் கிடையாது ஊடகத்தை தொடர்பு கொண்டு அவர் பேசும் விதத்தில் கூட பெரிய முன்னேற்றம் இருக்கிறது.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அபாரமாக இருந்தார். இந்திய கிரிக்கெட் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் சென்றார். நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்து இவ்வளவு சீக்கிரம் தகவமைந்து கொண்ட ஒரு வீரரை பார்த்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருடைய பெஸ்ட் வரவில்லை!” என்று கூறியிருக்கிறார்!