பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியை வெல்வதும் மேலும் ஐசிசி உலகக் கோப்பையை வெல்வதும் தனக்கு மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் அணி இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடிக் கொண்டு இருக்கிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன.
பாபர் அசாம் வரலாற்று சாதனை
பாகிஸ்தான் அணி ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியை ஒரு முறை கூட வென்றதில்லை என்கின்ற மோசமான வரலாற்றுடன் இருந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்திய அணியை வென்றது.
ஒரு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது இதுவே முதலும் கடைசியுமாக இன்று வரையில் இருந்து வருகிறது. இந்த சிறப்புமிக்க வெற்றி பாபர் அசாம் தலைமையில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த குறிப்பிட்ட போட்டியில் அவர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அரைசதம் தாண்டி அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியை வெல்வது முக்கியம்
இதுகுறித்து பாபர் அசாம் பேசும் பொழுது “இந்திய அணியை வீழ்த்துவது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தியது எனக்கு மிகவும் சிறந்த நினைவாக இன்று வரையில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து முதல் முறையாக இந்திய அணியை நான் வென்றேன்”
இதையும் படிங்க: ரோகித் விராட் வந்ததால வலி போயிடுச்சு.. இந்த 2 பேர்ல ஒருத்தர் தான் ஆடுவாங்க – மோர்னே மோர்கல் பேட்டி
“நான் ஐசிசி தொடரை வெல்ல விரும்புகிறேன். 2022 ஆம் ஆண்டு டி20 உலகk கோப்பை இறுதிப் போட்டியில் நாங்கள் இருந்தோம். ஆனாலும் நாங்கள் தோல்வி அடைந்தோம். நான் மேலும் உடல் தகுதியுடன் இருப்பதற்கு பெரிதும் முயற்சி செய்து வருகிறேன். இப்போது என் உடல் மிகவும் வித்தியாசமாக செயல்படுகிறது. நான் மிகவும் கூர்மையாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






