தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய அணிக்கு வந்திருப்பது, உற்சாகத்தை கொடுக்கிறது என இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்திருக்கிறார்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்திய அணிக்கு நெருக்கடி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களை இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணிகள் இணைந்து இருக்கிறார்கள். இந்த முதல் போட்டி ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. எனவே தனது சொந்த மாநிலத்தில் போட்டி நடப்பதால் முன்னாள் கேப்டன் தோனி இந்திய வீரர்களுக்கு நேற்று இரவு தன் வீட்டில் விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் வந்தது உற்சாகத்தை கொடுக்கிறது
இந்த தொடர் குறித்து மோர்னே மோர்கல் கூறும் பொழுது “கடந்த இரண்டு வாரங்களாக எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு இரண்டு நாட்கள் நேரம் கிடைத்தது. ஆனால் அடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஒரு நாள் அணியில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம்”
இதையும் படிங்க : வீரர்களை விளையாட சொன்ன நீங்கள், உள்ளூர் போட்டியை நேரில் பார்க்கிறீர்களா? அகர்கரை வெளுக்கும் ரசிகர்கள்
“நாங்கள் விளக்குகளின் கீழ் இரவில் பயிற்சி செய்தோம். நாளைய போட்டியில் ஆல் ரவுண்டர் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் அல்லது நிதீஷ் குமார் ரெட்டி இருவரில் யார் விளையாடுவார்கள்? என்பது குறித்து இன்று இரவு விவாதம் செய்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.






