பாபர் அசாம் பிரச்சனை.. நட்சத்திர பாக் வீரர் விரக்தியில் ஓய்வு அறிவிப்பு.. பரபரப்பான தகவல்!

0
12283
Pakistan

இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மற்றும் அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக வஹாப் ரியாஸ் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் பொறுப்பில் முகமது ஹபிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள, வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்திற்கு ஷாஹின் ஷா அப்ரிடி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஷான் மசூத் இருவரும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்கள்.

கேப்டனாக பாபர் அசாம் செயல்பாடு சரியில்லை என்று பெருவாரியான அதிருப்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் நிறைய இருந்தது. ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்குவதற்கு முன்பாக பாபர் அசாம் தாமாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் தனக்கென ஒரு புதிய அணியை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், சில வீரர்களை அவர் வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட வீரர்களே அதை வெளியில் தெரிவிக்கவும் செய்திருக்கிறார்கள். மேலும் பாபர் அசாம் தம்முடைய நண்பர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு அளிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் மற்றும் பாபர் அசாம் இடையே பெரிய வாய் சச்சரவுகள் சென்றது. இதேபோல் பாபர் அசாம் கேப்டன்ஷியில் இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தை தொடர்ச்சியாக முகமது நவாஸுக்கு பாபர் அசாம் கொடுத்து வந்தார். இவர்கள் இருவருக்கு இடையேயும் பிரச்சனைகள் நிலவியது.

இந்த நிலையில் 34 வயதான இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக இவர் புதிய பந்தில் பவர் பிளேவில் பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் புதிய பந்தில் வீச ஆளில்லாமல் பாகிஸ்தான் பெரிய பிரச்சனைகளை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் கருத்தில் வைத்து உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவது குறித்து யோசிக்கப்படவில்லை. மேலும் இமாத் வாசிம் 65 டி20 போட்டிகளில் 66 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் அவருடைய எக்கனாமி ஓவருக்கு ஆறு ரன்களில்தான் இருக்கிறது.

பாகிஸ்தானின் சுழற் பந்துவீச்சுத் துறை இந்த உலகக் கோப்பையில் மோசமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பாபர் அசாம் கேப்டன்ஷியில் இவர்கள் யார் குறித்தும் விவாதிக்கப்படவில்லை. தற்பொழுது இவர் ஓய்வும் அறிவித்துவிட்டார்!