எனக்கு ஆஸ்திரேலியாவில் 10 நாள் பயிற்சி.. லாங்கர் சாதாரணமான ஆள் கிடையாது – ஆயுஷ் பதோனி பேட்டி

0
16
Badoni

நேற்று டெல்லி அணிக்கு எதிராக லக்னோ அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடியது. இந்தப் போட்டியில் லக்னோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தாலும், அந்த அணியின் இளம் வீரர் ஆயுஸ் பதோனி சிறப்பாக விளையாடியிருந்தார். நேற்றைய போட்டி குறித்தும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

லக்னோ அணி நேற்றைய போட்டியில் ஏழு விக்கெட்டுகளை 94 ரன்கள் இழந்துவிட்டது. இந்த நேரத்தில் 9வது வீரராக வந்த வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் கானை வைத்துக்கொண்டு, இளம் வீரர் ஆயுஸ் பதோனி மிகச் சிறப்பான ஆட்டத்தை புத்திசாலித்தனமாக வெளிப்படுத்தினார். லக்னோ அணி 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது கிடையாது என்பதால், அந்த இலக்கை நோக்கி அணியை அருமையாக நகர்த்தினார்.

- Advertisement -

ஆயுஸ் பதோனி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடக்கம். மேலும் அர்ஷத் கானுடன் எட்டாவது விக்கெட்டுக்கு 42 பந்தில் 73 ரன்கள் ஆட்டம் இழக்காமல் சேர்த்தார்கள். இது ஐபிஎல் வரலாற்றில் எட்டாவது விக்கட்டுக்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். நடப்பு ஐபிஎல் தொடரில் கொஞ்சம் தடுமாறி வந்த அவருக்கு இந்த போட்டி சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

நேற்றைய போட்டி குறித்து பேசி இருக்கும் ஆயுஸ் பதோனி கூறும் பொழுது “எங்கள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உடன் எனக்கு நல்ல பந்தம் இருக்கிறது. நான் ஆஸ்திரேலியாவிற்கு சென்றேன். அங்கு அவர் எனக்கு பேட்டிங் சம்பந்தமாக நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். எனது ஆட்டத்தை மேம்படுத்த உதவினார்.

நான் செப்டம்பரில் லக்னோ அணியுடன் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தேன். அங்கு நாங்கள் ஜஸ்டின் லாங்கர் தலைமையில் 10 நாட்கள் பயிற்சி பெற்றோம். அவர் என்னுடைய பேட்டிங்கில் உதவி செய்தால். அது எனக்கு பெரிய உதவியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக்கு ஏதோ நடந்திருக்கு.. அவர் மறைக்கிறார்.. 3 போட்டியா இதை கவனிச்சீங்களா? – சைமன் டால் குற்றச்சாட்டு

நான் எங்கள் கேப்டன் கேஎல்.ராகுல் உடன் நிறைய உரையாடல்கள் நடத்தியிருக்கிறேன்.அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார். நீங்கள் சிறந்த வீரர் உங்களால் ஆட்டத்தை நிச்சயம் முடிக்க முடியும் என்று அவர் எப்போதும் என்னிடம் கூறுவார். இந்த சீசன் ஆரம்பம் எனக்கு சரியாக இல்லை, ஆனாலும் நான் வலைப் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டேன். எனவே நான் நம்பிக்கையுடன் இருந்தேன். எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த கேஎல்.ராகுல் மற்றும் ஜஸ்டின் லாங்கர் இருவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.