55 பந்து 165 ரன்.. நான் கிறிஸ் கெயில் ரெக்கார்ட உடைச்சது எனக்கே தெரியாது – பதோனி பேட்டி

0
1086
Badoni

தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கம் நடத்திவரும் டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடரில் கிறிஸ் கெயிலின் பிரமாண்ட சாதனை ஒன்றை இளம் வீரர் பதோனி உடைத்திருந்தார். ஆனால் அப்படி ஒரு சாதனையை உடைத்தது தனக்குத் தெரியாது என அவர் கூறியிருக்கிறார்.

டெல்லி கிரிக்கெட் சங்கம் இந்த வருடம் முதல் டெல்லி பிரிமியர் லீக் டி20 தொடரை முதன்முறையாக நடத்துகிறது. இந்த தொடரில் தெற்கு டெல்லி அணியை வழிநடத்தும் ஆயுஷ் பதோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் ஏலம் நெருங்கியிருக்கும் நிலையில் அவரது சிறப்பான ஆட்டம் அவருக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

165 ரன் 19 சிக்ஸ்

சில நாட்களுக்கு முன்பு டெல்லி பிரிமியர் லீக் தொடரில் வடக்கு டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தெற்கு டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி வெறும் 55 பந்துகளில் 165 ரன்கள் குவித்து மிரள விட்டார். இவரது அதிரடியால் அவருடைய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் அவர் ஒரு டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து இருந்தார். கிறிஸ் கெயில் பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் டி20 தொடரில் ஒரு போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்திருந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சாதனையை உடைத்தது தெரியாது

இதுகுறித்து பேசி இருக்கும் ஆயுஷ் பதோனி கூறும் பொழுது “நான் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 175 ரன்கள் அடித்திருந்ததைத்தான் அறிந்திருந்தேன். எனக்கு ஒரு போட்டியில் 19 சிக்ஸர்கள் அடித்தது கிறிஸ் கெயில் ரெக்கார்டை உடைத்தது என தெரியாது.

ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் என்னை தக்க வைப்பார்களா? என்பது குறித்து எனக்கு தெரியாது. எத்தனை பேரை தக்க வைக்க முடியும் என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் கேஎல்.ராகுல் ஒரு நல்ல கேப்டன். நாங்கள் நிறைய பேசுகிறோம், அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவர் எனக்கு நிறைய விஷயங்களை விளக்குகிறார். மைதானத்திற்கு வெளியேயும் உதவியாக இருக்கிறார். அவர் கேப்டன்சியில் விளையாட விரும்புகிறேன்.

இதையும் படிங்க : வாகன் என்னைய அப்படி மோசமா சொன்னது.. ஆச்சரியமாவே இல்ல.. காரணம் இதுதான் – ஒல்லி போப் பேட்டி

கம்பீர் சாரிடம் இருந்தும் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரும் எனக்கு நிறைய விஷயங்களை விளக்குவார். முக்கியமாக அவர் போட்டியின் போது பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவார். இதை நான் அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அதை நான் போட்டியிலும் செயல்படுத்த முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -