தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தற்காலிகமாக கேப்டனாக இருந்து வரும் ஒல்லி போப் பற்றி மைக்கேல் வாகன் கடுமையாகவே விமர்சனம் செய்திருந்தார். ஆனால் இது தனக்கு எந்த விதத்திலும் ஆச்சரியம் அளிக்கவில்லை என ஒல்லி போப் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற 100 பந்து தொடரில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். இதன் காரணமாக இங்கிலாந்தின் கோடைக்காலத்தில் நடைபெறும் மொத்த டெஸ்ட் தொடர்களிலும் இருந்து அவர் வெளியேறினார். ஆனாலும் அவர் அணியினருடன் தொடர்ந்து இருந்து வருகிறார்.
மைக்கேல் வாகன் விமர்சனம்
ஒல்லி போப் தலைமையில் இலங்கையை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதல் இரண்டு போட்டிகளை வென்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி விட்டது. இருந்தபோதிலும் கூட இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தற்காலிக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் மீது விமர்சனங்கள் வைத்திருந்தார்.
மைக்கேல் வாகன் தன்னுடைய விமர்சனத்தில் ஒல்லி போப் ஒரு பாதுகாப்பற்ற மனிதர் எனவும், இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவரைப் போல ஒருவரை பார்க்கவில்லை எனவும், மேலும் எதிர்கால இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக வருவதற்கான ஆளுமை அவரிடம் கிடையாது எனவும் கடுமையான முறையில் கூறியிருந்தார்.
ஆச்சரியமாக இல்லை
இதுகுறித்து ஒல்லி போப் கூறும் பொழுது “இது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் இந்த தொடருக்கு முன்பாகவே இது குறித்து எல்லாம் எனக்கு கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். இப்படியான நிறைய விமர்சனங்கள் வரும் என்று எனக்கு அவர் சொல்லி இருந்தார். உண்மையைச் சொல்வது என்றால் அணியில் சுற்றி இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பது மிகவும் முக்கியம். வீரர்களும் கருத்துக்களை கூற விரும்புகிறார்கள் வெளியில் முன்னாள் வீரர்களும் கருத்துக்கள் கூற விரும்புகிறார்கள். நிறைய சத்தம் இருக்க செய்யும் ஆனால் இது நல்லதுதான்.
இதையும் படிங்க : ஒரு ஓவரில் 6 சிக்ஸ்.. 2 சதம்.. ஐபிஎல்-ல் இவர் இருக்கும் அணியில் விளையாட விரும்பறேன் – பிரியன்ஷ் ஆர்யா பேட்டி
அனைவருக்கும் கருத்துகள் கூற முழு உரிமை இருக்கிறது ஆனால் நாங்கள் எங்கள் நான்கு சுவற்றுக்குள் இருக்கும் வீரர்களை நம்புவது ஆதரிப்பதும் மிகவும் முக்கியமானது ஆகும். இப்படியான விமர்சனங்கள் நான் திரும்பி பேட்டிங்கில் நல்ல நிலைக்கு வர உதவப் போவது கிடையாது. ஒரு இரண்டு ஆட்டம் சரியாக போகாத பொழுது இப்படியான விமர்சனங்கள் நம்மை மோசமாகத்தான் உணர வைக்கும். நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எப்படி விளையாடினேனோ இப்பவும் அப்படித்தான் விளையாடுகிறேன். இது குறித்தெல்லாம் நான் பெரிதாக சிந்திக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.