“அக்சர் வெளியே.. ஜடேஜா ஸ்ரேயாஸ் உள்ளே.. நடக்கும் ரகசியம் இதுதான்!” – உண்மையை உடைத்த அனலிஸ்ட்!

0
469
Axar

தற்போது இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களுக்கும் இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில், நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேலுக்கு இடம் தரப்படவில்லை.

- Advertisement -

அதேசமயத்தில் ரவீந்திர ஜடேஜா அவரது இடத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு, அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா டி20 தொடரில் ருத்ராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டன்கள் ஆக இருந்தார்கள்.

மேலும் அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 இந்திய அணியில் கில் மீண்டும் இடம்பெற்றிருக்கும் நிலையில், ஜெய்ஸ்வால், ருத்ராஜ், இசான் கிசான் ஆகிய துவக்க ஆட்டக்காரர்களும் இடம்பெற்ற இருக்கிறார்கள். இதனால் யார் துவக்க ஆட்டக்காரர்களாக வருவார்கள் என்கின்ற பெரிய கேள்வி இருக்கிறது. ஸ்ரேயாஸ் இந்திய டி20 அணிக்கு தேவையா என்கின்ற துணைக்கேள்வியும் இருக்கிறது

மேலும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் அணியில் இருந்தும் வாய்ப்பு தரப்படாத வாஷிங்டன் சுந்தருக்கு தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் வாய்ப்பு தரப்படுமா என்பது குறித்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள பிரபல கிரிக்கெட் அனலைஸ்ட் பிரசன்னா கூறும் பொழுது “தற்போதைய தேர்வுக்குழு மிகச் சிறப்பான வேலையை செய்திருக்கிறது. நிச்சயம் இதை பாராட்டியே ஆகவேண்டும். அவர்கள் தேர்ந்தெடுத்த டி20 அணி மிகவும் சரியான திட்டமிடப்பட்ட அணி.

அதாவது யாரெல்லாம் இந்திய டி20 அணிக்கு தேர்வாக வாய்ப்பு இருக்கிறதோ, அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதை பார்க்கவும், யாரெல்லாம் யாருக்கு மாற்று வீரர்களாக இருக்க முடியுமோ, அவர்களுக்கு வாய்ப்பு தரவுமே இப்படியான ஒரு அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

அக்சர் படேல் நிச்சயம் அணியில் இருப்பார். எனவே அவருக்கு மாற்றான ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் திலக் வர்மாவுக்கு மாற்று வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். குல்தீபுக்கு மாற்று வீரர் ரவி பிஸ்னாய். எனவே இது மாதிரியான மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தற்பொழுது இதை மனதில் வைத்து தான் இந்தியத் தேர்வுக்குழு புத்திசாலித்தனமான இந்த முடிவை எடுத்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!