கோலியை ஆட்டநாயகனா இருக்கலாம்.. ஆனா அந்த பேட்ஸ்மேன்தான் வெற்றிக்கு காரணம் – வாசிம் ஜாபர் சுட்டிக்காட்டல்

0
849
Jaffer

இந்திய அணி நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஒரு மேஜிக் போல வென்று முடித்திருக்கிறது. குறிப்பிட்ட தென் ஆப்பிரிக்க இன்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் நீண்ட நேரம் இந்தியா பின்னடைவில் இருந்து போட்டியை வென்று அசத்தியது. போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலியை விட இன்னொரு வீரரின் பங்களிப்பு பெரியது என வாசிம் ஜாபர் பேசியிருக்கிறார்.

இந்திய அணி இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் என மிக முக்கியமான மூன்று பெரிய விக்கெட்டுகளை இழந்து, ஏறக்குறைய உலக கோப்பையையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

- Advertisement -

இப்படியான நிலையில் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் மிகச் சிறப்பான பேட்டிங்யை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 54 பந்துகளில் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் அச்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். பவுலிங் ஆல் ரவுண்டராக வந்து பேட்டிங்கில் அவர் கொடுத்த தாக்கம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் வாசிம் ஜாபர் கூறும் பொழுது “ஒட்டு மொத்த உலகக் கோப்பை தொடரில் பெரிய ரன்களை விராட் கோலி எடுக்கவில்லை. ஆனால் அவர் சரியான நேரத்தில் சரியான போட்டிக்கு திரும்பி வந்தார். அவருடைய 76 ரன்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது. அவர் ஒரு முனையில் நின்று விளையாடி அதை அப்படியே வைத்திருந்தார்.

ஆனால் அக்சர் படேல் விளையாடிய விதம்தான், இந்திய அணியின் ரன் ரேட்டை எட்டுக்கு கீழே குறையாமல் அப்படியே வைத்திருந்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை அவர் ஆதிக்கம் செய்ய விடவில்லை. அவர் சரியாக அதிரடியாக விளையாடி விராட் கோலி உடன் சேர்ந்து ஒரு சரியான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லாமே பச்சை பொய்.. உ.கோ பைனலுக்கு பின்னாடி வந்த அந்த விஷயத்தை யாரும் நம்ப வேண்டாம் – ஓய்வு பற்றி டேவிட் மில்லர் பேச்சு

தற்போது கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறார்கள். இதுநிச்சயமாக ஒரு பெரிய இடைவெளியை உருவாக்கும். ஆனால் அவர்கள் இருவரும் ஓய்வு பெறுவதற்கு மிகச் சரியான தருணத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். உலகக் கோப்பையை வென்று ஓய்வு பெறுவது சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.