இந்திய கிரிக்கெட்

இன்னும் 6 நாள் இருக்கு.. அதனால ரோஹித் சர்மாகிட்ட நிச்சயம் இதை கேட்க போறேன் – அக்சார் பட்டேல் கலகலப்பு

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் ரோஹித் சர்மா தனக்கு அளித்த வாக்குறுதி குறித்து கலகலப்பாக பேசியிருக்கிறார்.

இந்திய அணி வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சார் பட்டேலின் ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கோட்டை விட்டார். தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை அக்சார் பட்டேல் வீழ்த்திய நிலையில், மூன்றாவது கேட்ச் ரோஹித் சர்மாவிடம் ஸ்லிப் திசையில் சென்றது.

அதனை ரோகித் சர்மா எதிர்பாராத விதமாக தவறவிட தரையில் வேகமாக இரண்டு மூன்று தடவை அடித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். மேலும் போட்டி முடிந்த பிறகு தான் செய்த தவறுக்கு அக்சார் பட்டேலை இரவு உணவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதியும் அளித்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

- Advertisement -

ரோகித் சர்மாவிடம் கேட்பேன்

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ஆல்ரவுண்டர் அக்சார் பட்டேல் ரோஹித் சர்மா தன்னை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்லவில்லை எனவும், அழைத்துச் செல்வதற்கு அவரை ஞாபகப்படுத்த வேண்டும் என்று கலகலப்பாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:எதிர்காலத்தில் விராட் ரோஹித் இல்லாத குறையை.. இந்த இளம் வீரர் போக்குவார் – நவ்ஜோத் சிங் கருத்து

இதுகுறித்து அவர் கூறும் போது ” அடுத்த போட்டிக்கு எங்களுக்கு இன்னும் ஆறு நாட்கள் விடுமுறை உள்ளது. எனவே எங்கள் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டது என்று நினைக்கிறேன். அதனால் இப்போது ரோகித் சர்மாவிடம் இரவு உணவு விருந்து குறித்து கேட்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்” என்று கலகலப்பாக அக்சார் பட்டேல் பேசியிருக்கிறார். இந்திய அணியின் மூன்றாவது மற்றும் கடைசியில் போட்டி வருகிற மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் முதல் அரை இறுதி போட்டி துபாயிலும் இரண்டாவது அரை இறுதி போட்டி பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Published by