எதிர்காலத்தில் விராட் ரோஹித் இல்லாத குறையை.. இந்த இளம் வீரர் போக்குவார் – நவ்ஜோத் சிங் கருத்து

0
559

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இல்லாத குறையை இந்த இளம் வீரர் போக்குவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோக் சிங் சித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் ரோஹித் இல்லாத குறை

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களாக தற்போது அறியப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறார்கள். கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பை பெற்றுக் கொடுத்ததன் மூலமாக விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றார்கள். மேலும் இந்த மூவரும் தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் விரைவில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற உள்ளதால் இவர்களுக்கு அடுத்ததாக புதிய நட்சத்திரத்தை இந்திய அணி அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மான் கில் இவர்கள் இருவரும் இல்லாத குறையை நீக்குவார் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தப் பையன் நீக்குவார்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆலமரத்தின் கீழ் எதுவும் வளராது, தற்போது இந்திய அணியில் ஆலமரமாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஷுப்மான் கில்லைப் பார்க்கும்போது, முந்தைய போட்டியில் அவருக்கு எதிராக வீசப்பட்ட நேர்கோட்டு பந்துகளுக்கு அவர் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ், ஒரு எதிரணியை அதிர்ச்சி அடைய வைக்கக்கூடிய தாக்குதல் ஆட்டமாகும். இது பிரமிக்க வைக்கிறது.

இதையும் படிங்க:எங்கள் அணியில் எரிச்சல் அடைய செய்யக்கூடிய நபர் இவர்தான்.. சும்மாவே இருக்க மாட்டாரு – ஆஸி கேப்டன் ஸ்மித் சுவாரஸ்யம்

இந்த ஆலமரத்தின் நிழலில் இருந்த மனிதன் தற்போது வெளிவந்து வயதுக்கு வந்து விட்டான். இப்படி சொல்வது என்பது கடினம். மனிதர்களின் திறன்கள் எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது என்றால், அவர்கள் என்ன முயற்சி செய்கிறார்கள் என்பதன் மூலம் அல்ல, அவர்கள் எப்படி முடிக்கிறார்கள் என்பதன் மூலமே உள்ளது. சதம் அடித்த பிறகும் நீங்கள் விக்கட்டை விடாமல் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஆட்டத்தை முடிப்பது உங்களை சிறந்த வீரர் ஆக்குகிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -