ரோகித் பண்றது தெளிவா தெரியுது.. ஜடேஜா டைம் முடிஞ்சது.. இனி அவர்தான் – இர்பான் பதான் பேட்டி

0
252
Irfan

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்று தாண்டி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. இதற்கு மேல் இறுதிப் போட்டி வரை எல்லா போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. எனவே அங்கு இந்திய அணி எப்படியான பிளேயிங் லெவனை அமைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்பொழுது இது குறித்து இர்பான் பதான் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இருவரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்.

முதல் சுற்று நடைபெற்ற அமெரிக்காவின் கண்டிஷனுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவருக்கும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் வரிசையை எட்டாம் இடம் வரையில் நீட்டித்தார்.

- Advertisement -

இதில் பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் 18 பந்தில் 20 ரன்கள் எடுத்து, இதுவரை மொத்தமாக மூன்று விக்கெட்டுகள் பந்துவீச்சில் கைப்பற்றி, ஓவருக்கு 6.5 ரன்கள் மட்டும் தந்து, அக்சர் படேல் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். அதே சமயத்தில் ஜடேஜா பந்துவீச்சில் ரன்கள் விட்டுத் தரவில்லை என்றாலும் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. மேலும் பேட்டிங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் ஆனார்.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் “பேட்டிங் திறனை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜடேஜாவை விட அக்சருக்கு நிறைய ரேஞ்ச் இருக்கிறது. இந்தியா இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் கிடைத்து இருப்பதால் இந்திய அணிக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது.

பேட்டிங் வரிசையில் அக்சர் படேல் இருக்க வேண்டும். அப்படி அவர் இருக்கும் பொழுது அவரால் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியும். தேவைப்பட்டால் நான்காவது இடத்திலும் பேட்டிங் செய்ய வர முடியும். எனவே ஜடேஜாவை விட அக்சர் படேல் அணிக்கு நல்ல வலிமையைக் கொடுக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐசிசி உங்களால அதையே செய்ய முடியலனா.. உலக கோப்பையை எதுக்கு நடத்துறிங்க? – கவாஸ்கர் விமர்சனம்

இதுகுறித்து மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” ஜடேஜாவை கேப்டன் ரோஹித் சர்மா அதிகம் பந்து வீச வைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக அக்ச்சர் படேலை பார்த்தார்கள். மேலும் நான்காவது இடத்திற்கு பேட்டிங்கில் யாரையாவது உயர்த்த வேண்டும் என்றாலும் அவர்கள் அக்சர் படேலையே பார்த்தார்கள். ஜடேஜாவை விட அக்சர் படேலை அவர்கள் தங்கள் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதுகிறார்கள்” என்று தெரிகிறது” என்று கூறி இருக்கிறார்.