ஐசிசி உங்களால அதையே செய்ய முடியலனா.. உலக கோப்பையை எதுக்கு நடத்துறிங்க? – கவாஸ்கர் விமர்சனம்

0
27
Gavaskar

2024 டி20 உலகக்கோப்பையை ஐசிசி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில் நடத்தி வருகிறது. ஆடுகளம் மற்றும் மழைக்கான திட்டமிடல் சரியாக இல்லாத காரணத்தினால் ஐசிசி மீது நிறைய விமர்சனங்கள் உண்டாகி இருக்கிறது. இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனம் ஒன்றை ஐசிசி மேல் வைத்திருக்கிறார்.

பொதுவாக ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஒரு சுற்று போட்டி நடக்கிறது என்றால், அந்த சுற்றின் கடைசிக்கட்ட போட்டிகளில்தான், அடுத்த சுற்றுக்கு செல்லும் அணி தெரிய வரும். எனவே ஒரு சுற்றின் கடைசிக்கட்ட போட்டிகள் மிகவும் முக்கியமானவை.

- Advertisement -

இப்படியான போட்டிகள்தான் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தக் கூடியவை. மேலும் சுற்றின் ஆரம்பத்தில் போட்டியை தோற்ற அணிகள் மீண்டு வருவதற்கு கடைசிக்கட்ட போட்டிகள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு அணி தோற்றால் கூட விளையாடி தோற்க வேண்டும்.

ஆனால் தற்பொழுது ஏ பிரிவில் நான்கு அணிகளின் கடைசிப் போட்டிகளும் அமெரிக்கா ஃபுளோரிடா மைதானத்தில் நடக்க இருந்தன. ஆனால் இந்த மைதானத்தில் மொத்தமாக மூன்று போட்டிகள் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

ஏ பிரிவில் மிகவும் முக்கியமான அயர்லாந்து மற்றும் அமெரிக்கா போட்டி ரத்தாக, அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு சென்றது பாகிஸ்தான் வெளியேறிவிட்டது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வந்தாலும் கூட, ஆடுகளத்தை மட்டுமே மூடி வைத்து மைதானத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக இந்திய அணி நேற்று விளையாட இருந்த போட்டியில் மழை இல்லை என்றால் கூட, அவுட்ஃபீல்டு ஈரமாக இருந்ததால் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி மட்டும் சரியா?.. இது உலக கோப்பையே கிடையாது.. பாகிஸ்தான குறை சொல்றத நிறுத்துங்க – ரஷீத் லத்திப் பேட்டி

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “மைதானம் முழுமையும் மூடி வைக்க கவர் இல்லை என்றால், ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளை நடத்தக்கூடாது. நீங்கள் ஆடுகளத்தை மட்டும் மூடி வைத்துவிட்டு, மைதானத்தை அப்படியே விட்டுவிட முடியாது. இதனால் போட்டி நடைபெறாமல் ரத்து செய்யப்படுகிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.