கம்பீர் என்ன நினைக்கிறாரோ எனக்கு அதுதான்.. சக வீரர்கள் கிட்ட பேசினப்ப இத சொன்னாங்க – அக்சர் படேல் பேட்டி

0
267
Axar

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், இந்திய வீரர் அக்சர் பட்டேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து, ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

எங்க வீரர்கள் இதை சொன்னார்கள்

இன்றைய போட்டியில் பேட்டிகள் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேல் கடைசியில் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 21 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். மேலும் நான்கு ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டும் விட்டு தந்து மேத்யூ ஷார்ட் மற்றும் ஜோஸ் இங்லீஷ் விக்கெட்டை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து இவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இந்த போட்டி குறித்து பேசி உள்ள அக்சர் படேல் கூறும் பொழுது ” இன்று எனக்கு கொஞ்சம் மேலே பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நான் பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த காரணத்தினால் எனக்கு ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் வீரர்களிடம் கேட்ட பொழுது பந்து கொஞ்சம் நன்று வருவதாகவும் அதே சமயத்தில் பவுன்ஸ் இருப்பதாகவும் சொன்னார்கள்”

- Advertisement -

எல்லாம் அணி நிர்வாகத்தின் விருப்பம்தான்

“என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பிடித்த பேட்டிக்கு பொசிஷன் எதுவென்றால் அணி நிர்வாகத்திற்கு என்ன பிடிக்கிறதோ அதுதான். அணிக்காக என்னால் தாக்கத்தை செலுத்த முடிந்தால் அது எனக்கு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும். நான் ஆறு அல்லது ஏழாவது இடத்தில் தான் விளையாட வேண்டும் என்று விரும்புவது கிடையாது. என்னை எங்கு அனுப்பினால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அணி நிர்வாகம் நினைகிறதோ அப்படி செய்யலாம்”

இதையும் படிங்க: 167 ரன்.. தெறிக்க விட்ட இந்திய பவுலர்கள்.. சூர்யாவின் மாஸ் கேப்டன்சி.. வாஷியின் பதிலடி.. ஆஸி தோல்வி

“நான் பந்துவீச்சை பொறுத்த வரையில் எதிரணி பேட்ஸ்மேன்கள் பலம் பலவீனத்தை பொறுத்து என் திட்டத்தை அமைகிறேன். அவர்கள் என்னை நேராக அடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தால் மிடில் ஸ்டெம்ப் நோக்கி வீசுவேன். எனக்கு விஷயங்கள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்றால் நான் கொஞ்சம் மேலேயும் வீசுவேன். என்னுடைய திட்டம் எப்பொழுதும் தாக்குதல் முறையில் பந்து வீச வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -