இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய பவுலர்களின் அசத்தலால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டிருக்க அடுத்த இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் தொடரின் நான்காவது டி20 போட்டி இன்று குயின்ஸ்லான்ட் மைதானத்தில் நடைபெற்றது.
தப்பித்த இந்திய அணி
இன்று மைதானம் பெரியதாகவும் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவும் இருந்ததால் பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக விளையாடுவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 28 ரன், கில் 39 பந்தில் 46 ரன் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள்.
கீழ் வரிசையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் 10 பந்தில் 20 ரன், சிவம் துபே 18 பந்தில் 22 ரன், அக்சர் படேல் 11 பந்தில் 21* ரன் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ஆடம் ஜாம்பா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய பவுலர்கள் அசத்தல்
இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 19 பந்தில் 25 ரன், கேப்டன் மிட்சல் மார்ஸ் 24 பந்தில் 30 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை தந்தார்கள். ஆனால் இதற்குப் பிறகு இந்திய பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணியை அடக்கினார்கள்.
நட்சத்திர பேட்ஸ்மேன் டிம் டேவிட் 9 பந்தில் 14 ரன், ஸ்டோய்நிஸ் 19 பந்தில் 17 ரன், கிளன் மேக்ஸ்வெல் 4 பந்தில் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவர்களில் 119 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சில் அக்சர் படேல் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதையும் படிங்க : 207 ரன்.. கடைசி 6 பந்தில் 16 ரன்.. நியூசி வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் சுவாரசிய முடிவு.. 2வது டி20
இந்த போட்டியில் ஐந்தாவது பவுலரான சிவம் துபே இரண்டு ஓவர் வீச வேண்டி இருந்தபோதிலும், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி பும்ரா மற்றும் அர்ஸ்தீப் இவர்களுக்கு ஓவர் கொடுத்து விக்கெட் கைப்பற்றி, ஆஸ்திரேலியா பவுலர்களை பேட்டிங் செய்ய சூரியகுமார் கொண்டு வந்தார். அவருடைய இந்த தைரியமான முடிவு இன்று கை கொடுத்தது. மேலும் வாஷிங்டன் சுந்தர் 17வது ஓவரில்தான் பந்து வீச அழைக்கப்பட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட் கைப்பற்றி தனக்கு வந்து வீச வாய்ப்பு தராததற்கு பதிலடி கொடுத்தார்.






