10,000 ரன் அடிச்ச பின்னாடி என்னையே செஞ்சுட்டாங்க.. ஷமி பாவம் கம்பீர் வாய்ப்பு தரணும் – கங்குலி பேட்டி

0
0

​இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமி இந்திய டீமில் மீண்டும் இடம் பிடிப்பது குறித்தும் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா என்பது குறித்தும் முன்னாள் பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

​சமீபத்தில் முடிவடைந்த துலீப் டிராபி தொடரில் ஈஸ்ட் ஜோன் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முக்கிய பங்களிப்பை அளித்தார். சவுத் ஜோன் அணிக்கு எதிரான மேட்ச்சில் முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி ஈஸ்ட் ஜோன் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

- Advertisement -

​சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெறாத போதிலும் தொடர்ந்து டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஷமி தனது சிறப்பான பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஷமி இந்திய டீமிற்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து கங்குலி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

​இதுகுறித்து சௌரவ் கங்குலி பேசும்போது “அவர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தினமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், நான் 10,000 ரன்கள் அடித்த பிறகும் கூட ஒரு வருடம் இந்திய அணியில் விளையாடாமல் இருந்து பின்னர் கம்பேக் கொடுத்தேன், அவர் நன்றாக பெர்ஃபார்ம் செய்தும் ஏன் இந்திய டீமில் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய கங்குலி “அவர் 2027 வேர்ல்ட் கப் தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பதை இப்போது கூற முடியாது, ஆனால் முகமது ஷமி இந்திய அணியால் புறக்கணிக்கப்படவில்லை அவர் நாட்டிற்காக நிறைய மேட்ச்கள் விளையாடி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -