ஆவேஷ் கானை தேர்ந்தெடுக்க மாட்டேன் ; பதிலாக இந்த பஞ்சாப் வீரரை அணியில் சேர்ப்பேன் – ஆஷிஷ் நெஹ்ரா

0
44

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலாக நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசி 6 ஓவரில் அந்த அணி வெற்றி பெற 78 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி டேவிட் மில்லர் மற்றும் வேன் டெர் டுஸ்சென் துணை கொண்டு 5 பந்துகள் மீதும் வைத்தே வெற்றி பெற்றது. இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஆஷிஸ் நெஹ்ரா முதல் டி20 போட்டி குறித்து ஒரு சில விஷயங்களை நம்மிடம் பேசியிருக்கிறார்.

ஆவேஷ் கான் இடத்தில் இவர் விளையாடி இருக்க வேண்டும்

- Advertisement -

கேஎல் ராகுல் மற்றும் குல்திப் யாதவ் அணியில் இல்லை. மூத்த வீரர்கள் ரோஹித் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் மட்டுமே இருக்கிறார்.

முதல் டி20 போட்டியில் ஆவேஷ் கான் இடத்தில் அர்ஷ்தீப் சிங் தான் விளையாடி இருந்திருக்க வேண்டும். நானாக இருந்திருந்தால் நிச்சயம் அவரே தான் அந்த இடத்தில் விளையாட வைத்திருப்பேன் என்று தற்போது கூறியிருக்கிறார். எனினும் இந்திய அணி முதல் போட்டியில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு இரண்டாவது போட்டிக்கு எந்தவித பதட்டமும் இன்றி செல்ல வேண்டும். இரண்டாவது போட்டிக்கு எந்த வித மாற்றமும் தேவையில்லை.

நிலைமையில் கடுமையான மாற்றம் இல்லாவிட்டால் முதல் மூன்று போட்டிகளில் இதே அணியுடன் இந்திய அணி விளையாடலாம். இரண்டாவது போட்டி கட்டாக்கில் நடைபெற இருக்கின்றது அங்கே அதிக ரன்கள் குவிக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே இந்திய அணி சற்று ஜாக்கிரதையாக இரண்டாவது போட்டியில் விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

- Advertisement -

இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் பற்றி பேசியுள்ளார் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பர்ணல் “இந்த போட்டி முக்கியமானதாக இருக்கும். இந்தியா நிச்சயம் மீண்டு வரும். அவர்கள் ஒரு தரமான அணி அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாங்கள் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. பெங்களூரு டி20 வரையிலான போட்டி வரை ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.