ஆர்சிபி ரசிகர்களை பார்த்துதான் பயம்.. ரொம்ப ஓவரா பண்ணிட்டேன்.. ஆவேஷ் கான் பேட்டி

0
73
Avesh

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக முன்னணி வீரர்கள் அனைவரும் தங்களது அணியில் இணைந்து பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிவீரர் ஆவேஷ் கான் பெங்களூர் அணி ரசிகர்களைப் பார்த்து தான் பயப்படுவதாக சில சுவாரசியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நடைபெறும் முன்னணி தொடரான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் மற்ற அணி வீரர்களும் தங்கள் அணிகளில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

2008ஆம் ஆண்டு கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி, அதன் பிறகு ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. தரமான வீரர்கள், தரமான கேப்டன் என்று இருந்த போதும் ஏதோ ஒன்று அந்த அணிக்கு குறையாகவே இருந்து வருகிறது. கடந்த இரண்டு சீசன்களாக சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி குமார் சங்ககாரா பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, சிறப்பான முறையில் விளையாடி வருகிறது.

எனவே இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களத்தில் குதித்துள்ள ராஜஸ்தான் அணி, லக்னோ அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஆவேஷ் கானை பத்து கோடி ரூபாய்க்கு தங்கள் அணியில் எடுத்துள்ளது. இதற்கு மாற்று வீரராக ராஜஸ்தான் அணியில் விளையாடிக் கொண்டிருந்த தேவ்தத் படிக்கல்லை லக்னோ அணிக்கு பரிமாற்றம் செய்துள்ளது.

கடந்த சீசனில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆவேஷ் கான் ஒன்பது போட்டிகளில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இருப்பினும் களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடு பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கினை கொடுத்தது. எடுத்துக்காட்டாக கடந்த சீசனில் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றதும் ஆவேஷ் கான் ஆவேசமாக தனது ஹெல்மட்டை தூக்கி தரையில் அடிப்பார். இருப்பினும் அவர் வெற்றிக்கான கடைசி ரன்னை பிஸ்னாய் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ராஜஸ்தான் அணியில் இணைந்த ஆவேஷ் கான், நிரூபர் ஒருவரின் கேள்விக்கு சுவாரசியமாக பதில் அளித்துள்ளார். அதில் தற்போதைய பேட்ஸ்மேன்களில் சிறந்த பினிஷர் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எம் எஸ் தோனி என்று பதிலளித்தார். பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கடைசி கேள்வியில் நீங்கள் யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆவேஷ் கான் “நான் ஆர்சிபி ரசிகர்களை பார்த்து பயப்படுகிறேன்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஜெயிச்ச பெண்கள் ஆர்சிபி.. ஆண்கள் அணிக்கு செய்தி அனுப்பிய விஜய் மல்லையா

அவர் பெங்களூர் அணிக்கு எதிராக ஹெல்மெட்டை தூக்கி அடித்ததைக் கண்ட ரசிகர்கள் அவரை கேலி செய்த நிலையில், தற்போது இந்த பதிலை தெரிவித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இனி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவரது பங்களிப்பை காணலாம்.