AUSvsWI.. வெறும் 26 ரன்கள்.. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அட்டகாசமான வெற்றி.. தொடரும் வெஸ்ட் இண்டிஸ் அணியின் சோகம்

0
297
Australia

தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் அடிலய்டு ஓவல் மைதானத்தில் மூன்று தினங்களாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தற்பொழுது ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. வெஸ்ட் இண்டிஸ் அணி கெவிம் ஹாட்ச் 50 மற்றும் ஷாமார் ஜோசப் 36 ரன்கள் எடுக்க 188 ரன்களில் சுருண்டது. கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.

தனது முதல் இன்னிசை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 288 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. உஸ்மான் கவஜா 45 ரன்கள் எடுக்க டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி அதிரடியாக சதம் அடித்து 119 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் அறிமுக வீரர் ஷாமார் ஜோசப் ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கடுத்து இரண்டாவது இன்னிசை 95 ரன்கள் பின் தங்கி ஆரம்பித்த வெஸ்ட் இண்டிஸ் நேற்று 73 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு மொத்தமாக 26 ரன்கள் மட்டுமே இலக்காக கொடுக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜாவை ஒரு அதிபயங்கர பவுன்சர் மூலம் தாடையில் தாக்கி ஷாமார் ஜோசப் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

இதற்கு அடுத்து எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் 6.4 ஓவர்களில் 26 ரன்கள் இலக்கை எட்டி ஆஸ்திரேலியா அபாரமான முறையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் வெஸ்ட் இண்டிஸ்க்கு ஒரே ஆறுதல் இன்னிங்ஸ் தோல்வி அடையவில்லை என்பதுதான். கடந்த சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்திருக்கிறது!